Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நட்பே துரோகம் தான்? மிஸ்டர் லோக்கல் சிவகார்த்திகேயன் ஓபன் டாக்!

Webdunia
திங்கள், 3 ஜூன் 2019 (18:04 IST)
இயக்குனர் எம் ராஜேஷ் இயக்கத்தில் வந்த மிஸ்டர் லோக்கல் படம் தோல்விப் படம் தான் என்று நடிகர் சிவகார்த்திகேயன் நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழாவில் உருக்கமாக பேசியுள்ளார்.  
சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த மே 17ம் தேதி வெளியான படம் மிஸ்டர் லோக்கல். இப்படத்தில் சிவகார்த்திகேயக்கு ஜோடியாக நயன்தாரா, ராதிகா சரத்குமார், சதீஷ், ரோபோ சங்கர், ஜான் விஜய், தம்பி ராமையா, யோகி பாபு ஆகியோர் பலர் நடித்திருந்தனர். எனினும், இப்படம் ரசிகர்களிடையே போதுமான வரவேற்பு பெறவில்லை. தியேட்டர்காரர்களும் முந்தைய சிவகார்த்திகேயன் படங்கள் போல் இந்தப்படத்திற்கு கூட்டமில்லை என தெரிவித்து வந்தனர். இதனால் வசூலில் பின்தங்கி தோல்வியை தழுவியது. 
 
மிஸ்டர் லோக்கல் தோல்வியை தொடர்ந்து சிவா. நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா என்ற படத்தை தயாரித்துள்ளார். இப்படத்தின் இசை வெளியீட்டுவிழாவில்  பேசிய அவர் , ”மிஸ்டர் லோக்கல் திரைப்படம் தயாரிப்பாளருக்கு லாபம் கொடுத்ததா? இல்லையா? என்பதை பற்றி நான் பேசவில்லை. தொழில்ரீதியாக அனைவருக்கும் நான் லாபமாக இருக்கவேண்டும் என்றுதான் விரும்புகிறேன். 
 
மேலும் நட்பு, துரோகம் கலந்ததுதான் என்னுடைய பயணம். தோல்வியிலும் என்னுடனே இருக்கும் என் ரசிகர்கள் மட்டும் தான் என் பலம். இனி வரும் திரைப்படங்கள் அனைவருக்கும் பிடித்த மாதிரியாகவே இருக்கும் என உறுதியாக கூறுகிறேன்’’ என்று தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

விண்வெளிக்கு செல்லும் அல்லு அர்ஜுன்? தமிழில் ஒரு Interstellar? அட்லீ செய்யப்போகும் மேஜிக்!?

ஆட்டோகிராப் ரிலீஸ் தேதி அறிவிப்பு.. பிரபல தயாரிப்பாளர் சேரனுக்கு வாழ்த்து..!

அட இருங்க் பாய்..! லியோவை முறியடித்த குட் பேட் அக்லி ட்ரெய்லர்!

23 ஆண்டுக்கு பின் ஹரி இயக்கத்தில் நடிக்கும் பிரபல நடிகர்: அதிகாரபூர்வ அறிவிப்பு..!

’குட் பேட் அக்லி’: தமிழ்நாடு போலவே அண்டை மாநிலங்களிலும் 9 மணிக்கு தான் முதல் காட்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments