Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அடுத்தடுத்து கார்த்தியின் 4 படங்களின் இரண்டாம் பாகங்கள்: ரசிகர்கள் உற்சாகம்!

Webdunia
புதன், 26 அக்டோபர் 2022 (14:43 IST)
கார்த்தி நடித்த நான்கு படங்கள் அடுத்தடுத்து இரண்டாம் பாகங்கள் உருவாகி வருவது அவரது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
 
கார்த்திக் நடித்த கைதி திரைப்படம் விரைவில் இரண்டாம் பாகம் உருவாக உள்ளது என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு தொடங்க உள்ளதாக சமீபத்தில் அளித்த பேட்டியில் கார்த்தி கூறியிருந்தார் என்பதும் தெரிந்ததே
 
இந்த நிலையில் சர்தார் படத்தின் இரண்டாம் பாகம் குறித்து அறிவிப்பு நேற்று சர்தார் படத்தின் வெற்றி விழாவில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதனை அடுத்து இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
ஏற்கனவே கார்த்தி நடிப்பில் மணிரத்தினம் இயக்கத்தில் உருவான பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது என்பதும் இந்த படம் வரும் ஏப்ரல் மாதம் வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது
 
மேலும் செல்வராகவன் இயக்கத்தில் கார்த்தி நடித்த ஆயிரத்தில் ஒருவன் என்ற திரைப்படமும் இரண்டாம் பாகம் தயாரிக்கும் திட்டம் உள்ளதாகவும் இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நடிகர் விஜய் ஆண்டனியின் 'மழை பிடிக்காத மனிதன்' படம் ‘யு/ஏ’ சான்றிதழ் பெற்றுள்ளது!

ஆங்கிலத்தில் ஏ ஐ தொழில்நுட்பம் மூலமாக டப் ஆகும் சிம்புவின் சூப்பர் ஹிட் திரைப்படம்!

நேர்காணல் கேட்ட சன் டிவி… நோ சொன்ன விஜய்- இதனால்தான் கோட் வியாபாரம் கைமாறியதா?

தசாவதாரம் படத்தில் தான் செய்த சாதனையை இந்தியனில் முறியடிக்கும் கமல்ஹாசன்!

ரகுல் ப்ரீத் சிங்கின் கணவருக்கு 250 கோடி ரூபாய் நஷ்டம்.. சொத்துகளை விற்ற சோகம்!

அடுத்த கட்டுரையில்