Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அப்பாடி! ஒருவழியா கிடைச்சிருச்சு: உதயநிதி ஸ்டாலின் நிம்மதி

Webdunia
வெள்ளி, 12 மே 2017 (07:37 IST)
உதயநிதி ஸ்டாலின் முதன்முதலாக கடந்த 2012ஆம் ஆண்டு ஹீரோவாக நடித்த படமான ஒரு கல் ஒரு கண்ணாடி' முதல் கடந்த ஆண்டு வெளிவந்த 'மனிதன்' படம் வரை ஒரு படத்திற்கு கூட தமிழக அரசின் வரிவிலக்கு கிடைக்கவில்லை. ஏனெனில் கடந்த 2011ஆம் ஆண்டு முதல் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசு ஆட்சியில் இருந்ததால்.







இந்த நிலையில் ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர் வெளிவரும் உதயநிதி நடித்த 'சரவணன் இருக்க பயமேன்' படத்திற்கு தற்போது வரிவிலக்கு கிடைத்துள்ளது. இந்த படம் தான் வரிவிலக்கு பெற்ற உதயநிதியின் முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் உதயநிதி நிம்மதி அடைந்துள்ளார்.

'மனிதன்' உள்பட அவரது அனைத்து படங்களின் டைட்டிலும் தமிழில் இல்லை என்று கூறி வரிவிலக்கு மறுக்கப்பட்டது. இதற்காக உதயநிதி கோர்ட் படியேறி வழக்குகளையும் சந்தித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இசைக் கச்சேரியில் செம்ம vibe-ல் ஆண்ட்ரியா… கூல் க்ளிக்ஸ்!

மாளவிகா மோகனின் லேட்டஸ்ட் க்யூட் புகைப்பட தொகுப்பு!

கார்த்தி 29 படத்தில் முக்கிய வேடத்தில் வடிவேலு?... பேச்சுவார்த்தை நடத்தும் இயக்குனர்!

ராஜமௌலி மகேஷ்பாபு படத்தின் பணிகள் தொடங்கியது!

ரெட்ட தல படத்தின் முக்கிய அப்டேட் கொடுத்த அருண் விஜய்!

அடுத்த கட்டுரையில்
Show comments