Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பொன்வண்ணனுக்கு நடிகர் சங்கம் கால அவகாசம்

Webdunia
செவ்வாய், 12 டிசம்பர் 2017 (11:13 IST)
பொன்வண்ணன், தன்னுடைய ராஜினாமாவைத் திரும்பப் பெற்றுக்கொள்ள நடிகர் சங்கம் கால அவகாசம் வழங்கியுள்ளது.
நடிகர் சங்க செயலாளராக இருக்கும் விஷால், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தது  தனக்குப் பிடிக்காத்தால், தான் வகித்துவரும் நடிகர் சங்க துணைத் தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக நடிகர் சங்கத் தலைவர் நாசரிடம் கடிதம் கொடுத்துள்ளார் பொன்வண்ணன்.
 
நடிகர் சங்கத்தில் பதவியேற்கும்போது, எந்த அரசியல் கட்சியையும் சாராமல் இருக்க வேண்டும் என்று உறுதியேற்றுக் கொண்டதாகவும், ஆனால் விஷால் அதிலிருந்து விலகியிருப்பதாகவும் பொன்வண்ணன் தெரிவித்திருந்தார்.
 
இந்நிலையில், நடிகர் சங்கத்தின் சிறப்பு செயற்குழு கூட்டம், பொன்வண்ணனின் ராஜினாமா கடிதத்தைப் பற்றி விவாதிப்பதற்காக நேற்று கூடியது. அதில், பொன்வண்ணனின் கருத்துகளுக்கு மதிப்பளித்து விவாதிக்கப்பட்டது. மேலும், தன்னுடைய நிலைப்பாட்டை விளக்கியும், சட்டத்திற்குப் புறம்பாகத் தான் எதுவும் செய்யவில்லை என்றும் விஷால் விளக்கினார்.
 
பொன்வண்ணனின் பணி நடிகர் சங்கத்தில் தொடர வேண்டும் என்பதற்காக, அவர் தன்னுடைய ராஜினாமா கடிதத்தைத்  திரும்பப் பெற்றுக் கொள்வதற்காக கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சிம்புவின் 51வது படத்தின் அறிவிப்பு.. துள்ளி குதிக்கும் ரசிகர்கள்..!

சுமார் 3 நிமிட ’விடாமுயற்சி’ வீடியோ.. படப்பிடிப்பின் போது இவ்வளவு சவால்களா?

ஒபன் ஆனதுமே விற்று தீரும் ‘விடாமுயற்சி’ டிக்கெட்டுகள்! திருவிழாவுக்கு தயாராகும் ரசிகர்கள்!

பஞ்சு மிட்டாய் ட்ரஸ்ஸில் க்யூட் போஸ் கொடுத்த திவ்யபாரதி!

பிக்பாஸ் ரைசாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

அடுத்த கட்டுரையில்
Show comments