Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அஜித்துக்கு சர்ப்ரைஸ் கொடுத்த அருண் விஜய்

Webdunia
வெள்ளி, 4 மே 2018 (10:24 IST)
ஷூட்டிங் ஸ்பாட்டில் சமைத்து, அஜித்துக்கே சர்ப்ரைஸ் கொடுத்து அசத்தியுள்ளார் அருண் விஜய். 
மணிரத்னம் இயக்கத்தில் தற்போது ‘செக்கச் சிவந்த வானம்’ படத்தில் நடித்து வருகிறார் அருண் விஜய். இந்தப் படத்தில் அரவிந்த் சாமி, சிம்பு, விஜய் சேதுபதி,  ஜோதிகா, அதிதி ராவ், ஐஸ்வர்யா ராஜேஷ், பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைகா புரொடக்‌ஷன்ஸ் இணைந்து  இந்தப் படத்தைத் தயாரிக்கின்றன. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.
 
பிப்ரவரியில் தொடங்கிய இந்தப் படத்தின் ஷூட்டிங், தற்போது வேகவேகமாக நடைபெற்று வருகிறது. ஆந்திராவில் ஷூட்டிங் நடைபெற்றபோது, ஷூட்டிங் இடைவேளையில் ஆம்லெட் செய்து யூனிட்டை ஆச்சர்யப்படுத்தி இருக்கிறார் அருண் விஜய்.
 
அதுமட்டுமல்ல, கெளதம் மேனன் இயக்கத்தில் ‘என்னை அறிந்தால்’ படத்தில் நடித்தபோது, ஷூட்டிங் ஸ்பாட்டில் சமைத்து அஜித் உள்பட அனைவருக்கும் சர்ப்ரைஸ் கொடுத்திருக்கிறார் அருண் விஜய். பொதுவாக, அஜித் தான் இதுபோன்று சமைத்து அனைவரையும் ஆச்சர்யப்படுத்துவார். ஆனால், அவரையே  ஆச்சர்யப்பட வைத்த பெருமை அருண் விஜய்க்கே சேரும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

'வசூல்ராஜா எம்பிபிஎஸ்' பட நடிகர் மரணம்? இணையத்தில் பரவும் அதிர்ச்சி தகவல்..!

அல்லு அர்ஜுன் & அட்லி இணையும் படத்தின் பட்ஜெட் இத்தனைக் கோடியா?

குட் பேட் அக்லிக்கு இருக்கும் எதிர்பார்ப்பு… முதல் நாளில் இத்தனைக் கோடி வசூலிக்க வாய்ப்பா?

பேச்சிலர் புகழ் திவ்யபாரதியின் ஸ்டன்னிங் க்யூட் போட்டோஷூட்!

இன்றிரவு 13 மாவட்டங்களில் கொட்டப்போகுது கனமழை.. வெப்பத்தில் இருந்து விடுதலை..!

அடுத்த கட்டுரையில்
Show comments