Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடிகர் சூர்யா குணமடைய வேண்டி ரசிகர்கள் கோயிலில் சிறப்பு வழிபாடு!

Webdunia
சனி, 25 நவம்பர் 2023 (13:44 IST)
நடிகர் சூர்யா விரைவில் குணமடைய வேண்டி ரசிகர்கள் இன்று சென்னை பாரிமுனையில் உள்ள காளிகாம்பாள் கோயிலில் சிறப்பு வழிபாடு செய்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் சூர்யா. இவர் தற்போது  ஞானவேல் ராஜா மற்றும் யுவி கிரியேசன்ஸ் தயாரிப்பில் கங்குவா என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை சிறுத்தை சிவா இயக்குகிறார். இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார்.

பிரமாண்டமாக உருவாகி வரும் இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில், சென்னையில் இப்பட சூட்டிங் நடைபெற்று வரும் நிலையில், இதன் ஷூட்டிங் ஸ்பாட்டில் நடிகர் சூர்யாவின் தோளில் கயிறு பட்டதில் அவருக்கு காயங்கள் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து சிகிச்சை பெற்று வரும் சூர்யா நேற்று முன்தினம்  ‘'உங்கள் அனைவரின் அன்புக்கு எப்போது நன்றியுடன் இருக்கிறேன்…. விரைவில் குணமடையுங்கள் என்ற உங்களின் மெசேஜ்களுக்கு நன்றி, நான் நன்றாக உணர்கிறேன்’’என்று தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், சூர்யா விரைவில் குணமடைய வேண்டி ரசிகர்கள் இன்று சென்னை பாரிமுனையில் உள்ள காளிகாம்பாள் கோயிலில் சிறப்பு வழிபாடு செய்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரிலீஸில் ஏற்பட்ட சிக்கல்… முதல் நாள் வசூலில் அடிவாங்கிய ‘வீர தீர சூரன்’

தென்னிந்திய நடிகர்கள் அதை செய்வதில்லை… வெளிப்படையாக வருத்தத்தைப் பதிவு செய்த சல்மான் கான்!

பாரதிராஜா மகனுக்காக மோட்சதீபம் ஏற்றிய இளையராஜா.. ஆத்மா சாந்தியடைய வேண்டுதல்..!

ரைசா வில்சனின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் புகைப்பட தொகுப்பு!

பிங்க் நிற கௌனில் க்யூட்டான போஸ்களில் கலக்கும் ரகுல் ப்ரீத்!

அடுத்த கட்டுரையில்
Show comments