Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பலத்த எதிர்ப்புகளுக்கு மத்தியில் வெளியானது பேமிலி மேன் சீசன் 2 – கலவையான விமர்சனங்கள்

Webdunia
வெள்ளி, 4 ஜூன் 2021 (07:57 IST)
பலத்த கண்டனங்களை பெற்ற பேமிலி மேன் சீரிஸ் நேற்று அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியாகியுள்ளது.

அமேசான் ப்ரைமில் 2019ல் வெளியான வெப்சிரிஸ் ஃபேமிலிமேன். ராஜ் மற்றும் டிகே என்ற இரட்டை இயக்குனர்கள் இயக்கிய இந்த தொடர் தீவிரவாதம் மற்றும் ரா புலனாய்வை மையமாக கொண்டது. இந்த தொடரின் முதல் பாகத்தில் மனோஜ் பாஜ்பாய், ப்ரியாமணி, சந்தீப் கிஷன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இந்த தொடர் பரவலான கவனத்தை இந்தியா முழுவதும் பெற்றது. அதனால் இரண்டாம் சீசன் பரவலாக எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஜூன் மாதம் வெளியாக உள்ளது. சீசன் 2  டிரைலர் கடந்த மாதம் வெளியானது.

இதில் சென்னையில் குண்டு வெடிப்பு சம்பவங்கள் நடப்பது போலவும் அதை புலனாய்வு செய்ய மனோஜ் பாஜ்பாய் வருவது போலவும் காட்டப்படுகின்றன. மேலும் சமந்தா இதில் பெண் தீவிரவாதியாக(விடுதலைப் புலிகள் அமைப்பின் பெண் போராளியாக நடித்திருக்கிறார்) சித்தரிக்கப்படுவதும், அவர் இலங்கை தமிழில் பேசுவதும் மேலும் பல சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளதாக தெரிகிறது. மேலும் விடுதலைப் புலிகள் அமைப்புக்கும் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்புக்கும் தொடர்பு இருப்பது போலவும் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதனால் தமிழகத்தில் உள்ள நாம் தமிழர் மற்றும் மதிமுக ஆகிய கட்சிகள் எதிர்ப்பு தெரிவிக்க, தமிழக அரசு மத்திய அரசுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளது.

ஆனால் எல்லா எதிர்ப்புகளையும் மீறி நேற்று அந்த சீரிஸ் அறிவித்தபடி வெளியாகியுள்ளது. சீரிஸைப் பார்த்த பலரும் டிரைலரில் வருவது போலவே விடுதலைப்புலிகளை அவமதிக்கும் வகையில் பலக் காட்சிகள் அமைந்துள்ளதாக கண்டனம் தெரிவித்துள்ளனர்.  மேலும் அதில் தீவிரவாதியாக நடித்துள்ள சமந்தாவுக்கும் கண்டனங்கள் எழுந்துள்ளன. ஆனால் மற்றொரு தரப்பினர் நேர்மறையான விமர்சனங்களை வைத்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஐஸ்வர்யா லஷ்மியின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

கேரளா புடவையில் அம்சமான போஸ் கொடுத்த மாளவிகா மோகனன்!

சண்முக பாண்டியன் நடிக்கும் படை தலைவன் டிரைலரில் விஜயகாந்த்.. ரமணா ரெஃபரன்ஸ்..!

என் மனைவிக்கு இறந்ததற்கு அல்லு அர்ஜுன் காரணம் இல்லை… இறந்த பெண்ணின் கனவர் கருத்து!

இறந்தவர் குடும்பத்துக்கு எல்லாவகையிலும் துணையாக இருப்பேன்… ஜாமீனில் வெளிவந்த பின் அல்லு அர்ஜுன் பேட்டி!

அடுத்த கட்டுரையில்
Show comments