Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அருண் விஜய் படப்பெயரை சொல்லி இளம்பெண்களை ஏமாற்ற முயன்ற கும்பல்!

Webdunia
புதன், 6 ஜனவரி 2021 (16:47 IST)
நடிகர் அருண் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படத்தில் நடிக்க இளம்பெண்கள் தேவை என்று செய்தி பரப்பியுள்ளது ஒரு கும்பல்.

நடிகர் அருண் விஜய்யின் தடம் படத்தின் வெற்றி அவர் மீது தமிழ் சினிமாவின் கவனத்தை ஈர்த்துள்ளது. இதையடுத்து அவர் வரிசையாக படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் அவர் நடிப்பில் மாபியா திரைப்படம் வெளியான நிலையில் நீண்டகாலமாக பாக்ஸர் என்ற திரைப்படம் உருவாக்கத்தில் உள்ளது. அதே போல நவீன் இயக்கத்தில் அக்னி சிறகுகள், அறிவழகன் இயக்கத்தில் பார்டர் மற்றும் தனது மாமா ஹரி இயக்கத்தில் ஒரு படம் என பிசியாக இருக்கிறார். அதில் ஒரு படமாக ஜி என் ஆர் குமாரவேலன் இயக்கத்தில் நடித்து வரும் சினம் திரைப்படம் உள்ளது.

இப்போது அவர் இயக்குனர் அறிவழகன் இயக்கும் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் அந்த படத்தில் நடிக்க ஆர்வமுள்ள இளம்பெண்கள் தேவை என்ற போலியான அறிவிப்பை இணையத்தில் ஒரு மோசடி கும்பல் வெளியிட அதை நம்பி யாரும் ஏமாறாதீர்கள் என அருண் விஜய் எச்சரித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அமெரிக்காவில் இருந்து கோட் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட வெங்கட் பிரபு!

துரை செந்தில்குமார் இயக்கத்தில் லெஜண்ட் சரவணன் நடிக்கும் படம் எப்போது தொடங்கும்? வெளியான தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments