பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறுவது பிந்துதான்; உறுதியாக சொல்லும் நெட்டிசன்கள்

Webdunia
வியாழன், 28 செப்டம்பர் 2017 (15:14 IST)
பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதி கட்டத்தில் உள்ளது. தற்போதைய நிலையில் 5 பேர் மட்டுமே உள்ளனர். 100 நாள் இறுதி போட்டியில்  4 பேர் மட்டுமே இருக்க வேண்டும். எனவே வாரத்தின் மத்தியில் ஒருவர் வெளியேற்றப்படுவார் என ஏற்கனவே பிக்பாஸ்  கூறியிருந்தார். இந்நிலையில் இறுதியாக டைட்டிலை வெல்லப்போவது யார் என்பதை தெரிந்து கொள்ள ரசிகர்கள் மிகவும்  ஆவலாக இருக்கின்றனர்.

 
பிக்பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் வெளியேறப்போவது யார் என்பது குறித்து ப்ரொமோ வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் ட்விட்டரில் கூறியிருப்பதாவது, வீடியோவில் 5 போட்டியாளர்களும் உள்ளனர். அதில் ஆரவ் பெட்டியுடன் செல்கிறார். இதனை பார்த்த பார்வையாளர்கள்  குழப்பத்தில் உள்ளனர். ஆரவ் கையில் இருப்பது அவருடைய பெட்டியா? அல்லது பிந்து மற்றும் ஹரிஷ் பெட்டியா? என்பது  தெரியவில்லை. இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் பிந்து மாதவிதான் சோகத்துடன் உள்ளார். எனவே பிந்து மாதவி வெளியேற்றப்பட்டு இருக்கலாம் என்று கருதப்படுகிறது. அதற்காக ஆரவ் பிந்து மாதவியின் பெட்டியை எடுத்து சென்றிருக்கலாம் எனவும்  கூறப்படுகிறது. என்ன நடக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பிக் பாஸ் சீசன் 8 போட்டியாளர்கள் மீண்டும் சந்திப்பு: என்றும் தொடரும் நட்பு!

பிக் பாஸ் புகழ் ஜூலிக்கு திருமண நிச்சயதார்த்தம்.. மணமகன் யார்?

’படையப்பா’ 2ஆம் பாகம் வரும்.. டைட்டில் இதுதான்.. ரஜினிகாந்த் கொடுத்த தகவல்..!

மனசு கஷ்டப்பட்டுத்தான் போயிருக்காரு.. ஏவிஎம் சரவணன் மறைவிற்கு காரணம்

நான் சிறை செல்ல எனது முன்னாள் மனைவி மஞ்சு வாரியர்தான் காரணம்: நடிகர் திலீப் பகிரங்க குற்றச்சாட்டு

அடுத்த கட்டுரையில்
Show comments