Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எனிமி படத்தை வாங்கத் தயங்கும் விநியோகஸ்தர்கள்… காரணம் இதுதானா!

Webdunia
செவ்வாய், 2 மார்ச் 2021 (20:02 IST)
சக்ரா படத்தின் தோல்வியால் விஷால் நடிப்பில் அடுத்து உருவாகும் எனிமி படத்தின் மார்க்கெட் மதிப்பு குறைந்துள்ளதாக சொல்லப்படுகிறது.

நடிகர் விஷால் நடிப்பில் அவரது விஷால் பிலிம் பேக்டரி சார்பில் தயாரித்துள்ள படம் சக்ரா. இப்படம் கடந்த பிப்ரவரி மாதம் 19 ஆம் தேதி ரிலீஸானது. இந்த படம் ரிலிஸாவதற்கு முன்னதாக பல தடைகளை சந்தித்து கடைசி நேரத்தில் எல்லாவற்றையும் சமாளித்து விஷால் படத்தை ரிலீஸ் செய்தார். அதனால் இந்த படம் ரிலீஸானதே விஷாலுக்கு மிகப்பெரிய சக்ஸஸ் என்று சொல்லப்பட்டது. ஆனால் ரிலீஸான படம் திரையரங்குகளில் வசூலில் சுணங்கியது.

கிட்டத்தட்ட 12 கோடிக்கு விற்கப்பட்ட தமிழக திரையரங்க உரிமை வசூலில் பாதியை கூட கொடுக்கவில்லையாம். இதனால் விஷால் விநியோகஸ்தர்களுக்கு 6.5 கோடி ரூபாய் வரை கொடுக்க வேண்டி இருக்கும் என சொல்லப்படுகிறது. இதனால் விஷால் அப்செட்டில் உள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்த தோல்வி விஷாலின் அடுத்தப்படமான எனிமி வியாபாரத்தில் தொய்வை ஏற்படுத்தியுள்ளதாம். சக்ரா வசூலித்த தொகையைக் கணக்கில் கொண்டு எனிமி படத்தைக் குறைந்த விலைக்கு விநியோகஸ்தர்கள் கேட்கின்றனராம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

’கோட்’ சிங்கிள் பாடல்.. விஜய்யுடன் பாடுவது பவதாரிணி.. ஏஐ டெக்னாலஜியின் மாயாஜாலம்..!

கிளாமர் லுக்கில் திவ்யபாரதியின் லேட்டஸ்ட் போட்டோஸ்!

கீர்த்தி பாண்டியனின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோ ஆல்பம்!

ரி ரிலீஸில் மாஸ் காட்டிய துப்பாக்கி… ரசிகர்கள் கொண்டாட்டம்!

சூரியின் கருடன் எந்த ஓடிடியில் எப்போது ரிலீஸ்?... வெளியான தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments