Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எஸ் பி பாலசுப்ரமண்யத்துக்கு சிகிச்சையளிக்கும் அவரது பாடல்கள் !

Webdunia
திங்கள், 17 ஆகஸ்ட் 2020 (16:38 IST)
எஸ் பி பி க்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் அறையில் அவரது பாடல்களை மருத்துவர்கள் ஒளிபரப்புவதாக சொல்லப்படுகிறது.

சமீபத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட எஸ்பி பாலசுப்பிரமணியன் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அவரது உடல் நிலை கொஞ்சம் கொஞ்சமாக தேறி வருவதாக மருத்துவமனை வட்டாரங்கள் கூறிய நிலையில் சற்று முன் வெளியான மருத்துவமனை அறிக்கையில் பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியம் உடல்நிலை மோசமடைந்ததால் அவர் தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் தற்போது அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த செய்தி சமூகவலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்த, இதுகுறித்து அவரது மகன் விளக்கமளித்தார். மேலும் அவரது புகைப்படமும் வெளியானது. இந்நிலையில் அவருக்கு எக்மோ எனப்படும் சிகிச்சை அளிக்கப்படுவதாக சொல்லப்படுகிறது. Extracorporeal Membrane Oxygenation எனப்படும் கருவி மூலமாக ரத்த சுத்திகரிப்பு செய்யப்படுவதாக சொல்லப்படுகிறது. இந்த கருவி இதயம் மற்றும் நுரையீரலுக்கு உரிய ரத்தம் செல்வதை உறுதிப்படுத்துகிறது. 

அவரது உடலில் முன்னேற்றம் ஏற்பட்டு வருவதாக அவரது மகன் சரண் வீடியோ வெளியிட்டிருந்தார். இந்நிலையில் கொரோனா நோயாளிகளின் மன இறுக்கத்தைக் குறைக்கும் வகையில் இனிமையான பாடல்கள் ஒளிபரப்ப படுவதாக சொல்லப்படுகிறது. இதே போல எஸ்பிபிக்கும் அவர் பாடிய பக்தி மற்றும் காதல் பாடல்கள் ஒலிபரப்ப படுவதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

விடாமுயற்சி, குட் பேட் அக்லி ரிலீஸ் தாமதமா? ஆதிக் ரவிச்சந்திரன் கொடுத்த அப்டேட்!

நிதி அகர்வாலின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

சம்யுக்தா மேனனின் ஸ்டன்னிங் புகைப்பட தொகுப்பு!

2024 ஆம் ஆண்டில் தமிழ் சினிமாவிற்கு 1000 கோடி ரூபாய் இழப்பு…!

தளபதி 69 படத்தின் டைட்டில் ரிலீஸ் எப்போது?.. வெளியான தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments