Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டாக்டர் ராஜசேகர் & ஜீவிதா தம்பதியினருக்கு ஒரு ஆண்டு சிறை – 12 வருட வழக்கில் தீர்ப்பு!

Webdunia
வியாழன், 20 ஜூலை 2023 (09:09 IST)
தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் டாக்டர் ராஜசேகர். அவரது மனைவி ஜீவிதா. இவர்கள் இருவரும் கடந்த 2011 ஆம் ஆண்டு நடிகர் சிரஞ்சீவியின் அறக்கட்டளை நடத்தும் ரத்த தான வங்கியில் தானமாக வழங்கப்படும் ரத்தம் வெளியில் விற்பனை செய்வதாக குற்றச்சாட்டை வைத்தனர்.

அவர்களின் இந்த கருத்தை அடுத்து சிரஞ்சீவியின் உறவினரும் தயாரிப்பாளருமான அல்லு அரவிந்த் ஐதராபாத் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு சுமார் 12 வருடங்களாக நடந்து வந்த நிலையில் தற்போது தீர்ப்பு வெளியாகியுள்ளது.

அதில் ராஜசேகர் மற்றும் ஜீவிதா தம்பதியினர் அவதூறாக பேசி இருப்பது நிரூபணம் ஆனதால் அவர்களுக்கு ஒருவருட சிறை தண்டனையும் 5 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. அவர்கள் அபராதத்தொகையைக் கட்டிவிட்டதால் ஜாமீன் வழங்கப்பட்டு, மேல்முறையீட்டுக்கு அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சீனாவிலும் மகாராஜாவின் ஆதிக்கம்.. ஆமிர்கானுக்கு நிகரான வசூல்!

ஸ்டன்னிங்கான லுக்கில் கலக்கும் மாளவிகா மோகனன்!

க்யூட் லுக்கில் கலக்கும் அதிதி ஷங்கர்… லேட்டஸ்ட் ஆல்பம்!

படம் கனெக்ட் ஆகுமா என பயந்தேன்.. ஆனால்?- மத கஜ ராஜா குறித்து திருப்பூர் சுப்ரமணியம் பாராட்டு!

கதையில சாவுன்னு இருந்தாலே என் பெயரை எழுதிடுறாங்க… மேடையில் கலகலப்பாக பேசிய கலையரசன்!

அடுத்த கட்டுரையில்
Show comments