Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டாக்டர் ஓடிடி ரிலீஸ்… அலறி அடித்து ஓடிய அமேசான் ப்ரைம்!

Webdunia
வியாழன், 1 ஜூலை 2021 (16:12 IST)
டாக்டர் படத்தின் ஓடிடி ரிலிஸ் பேச்சுவார்த்தையில் இருந்து அமேசான் ப்ரைம் பின்வாங்கியுள்ளதாம்.

நடிகர் சிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’ திரைப்படம் ஓடிடியில் ரிலீசாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக ஏற்கனவே செய்திகள் வெளியானது என்பதை பார்த்தோம். ஆனால் படத்தின் நாயகன் சிவகார்த்திகேயன் படம் திரையரங்கில் வெளியாவதையே விரும்புகிறார் என்றும் சொல்லப்பட்டது. இந்நிலையில் இன்று காலை இந்த படம் ஹாட்ஸ்டார் ஓடிடியில் வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி ரிலீஸாகும் என்று செய்திகள் சமூகவலைதளங்களில் பரவின.

இது சம்மந்தமாக தயாரிப்பு நிறுவனம் எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை. இந்நிலையில் இப்போது கே ஜே ஆர் ராஜேஷ் மறுத்துள்ளாராம். விரைவில் டாக்டர் படத்தின் ரிலீஸ் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடுவோம் எனவும் கூறியுள்ளாராம்.

இந்நிலையில் திரையரங்கு, ஓடிடி என இரு பக்கமும் பேச்சுவார்த்தையை நடத்தி வருகிறாராம் கேஜேஆர் ராஜேஷ். இதில் அவர் சொல்லும் தொகைக்கு திரையரங்க விநியோகஸ்தர்கள் படியவில்லையாம். அதே போல அமேசான் ப்ரைம் நிறுவனமும் பேச்சுவார்த்தையில் இருந்து பின்வாங்கியுள்ளதாம். இப்போதைக்கு நெட்பிளிக்ஸ் மற்றும் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஆகிய நிறுவனங்கள் மட்டுமே இப்போது பேச்சுவார்த்தையில் உள்ளதாம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கண்கவர் உடையில் ஐஸ்வர்யா லஷ்மியின் வித்தியாசமன போட்டோஸ்!

ஸ்ருதிஹாசனின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் போட்டோ ஆல்பம்!

ஒரு நாளில் ஒரு கோடி பேரால் பார்க்கப்பட்ட சூர்யாவின் ‘ரெட்ரோ’ பட டீசர்!

இசையமைப்பாளராக அறிமுகமான ஹாரிஸ் ஜெயராஜின் மகன் நிக்கோலஸ் ஹாரிஸ்!

கேம்சேஞ்சர் ப்ரமோஷன்… ஜானி மாஸ்டர் பெயரை நீக்கிய கியாரா அத்வானி!

அடுத்த கட்டுரையில்
Show comments