Webdunia - Bharat's app for daily news and videos

Install App

'துணிவு ''படத்தை வாங்க முன்வராத விநியோகஸ்தர்கள்?

Webdunia
புதன், 2 நவம்பர் 2022 (17:35 IST)
''துணிவு'' படத்தை வாங்குவதற்கு விநியோகஸ்தர்கள் தயங்குவதாக தகவல் வெளியாகிறது.

பீஸ்ட் படத்திற்குப் பின், வம்சி இயக்கத்தில், நடிகர் விஜய் நடித்து வரும் படம் வாரிசு. இப்படத்தில் விஜய்யுடன் ராஷ்மிகா மந்தனா, பிரபு, பிரகாஷ் ராஜ் மற்றும் ஜெயசுதா ஆகியோர்  நடித்துள்ளனர். இந்த படம் 2023 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு வெளியாவதால், இதன் போஸ்ட் புரடெக்சன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.  
.
சமீபத்தில், இப்படத்தின் ஆடியோ உரிமையை பாலிவுட்டின் பிரபல ஆடியோ வெளியீட்டு நிறுவனமான டி சீரிஸ் கைப்பற்றிய நிலையில், இப்படம் தயாரிப்பில் இருக்கும்போதே, சுமார் ரூ.280 கோடி வரையில் பிஸினஸ் ஆகியுள்ளதாகக் ஒரு தகவல் வெளியாகிறது.


ALSO READ: ''துணிவு''பட ப்ரீ ரிலீஸில் கலந்து கொள்வாரா அஜித்?
 
இந்த  நிலையில், பொங்கலுக்கு, ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித்தின் துணிவு படமும் ரிலீஸாகவுள்ளதாக இப்படத்தை வி  நியோகிக்கும் ரெட் ஜெயிண்ட் மூவிஸ் அறித்துள்ளதால் ரசிகர்கள், வீரம், ஜில்லா படங்கள் ரிலீஸைப் போன்று 2023 ஆம் ஆண்டு, ஒரே நாளில் இரு பெரிய படங்களின் வருகையை எதிர்பார்த்துள்ளனர்.


இந்த  நிலையில், வாரிசு படத்திற்கு மிகப்பெரிய அளவில் பிசினஸ் ஆகியிருப்பதாகவும், இதில்., பாதியளவுதான்,துணிவு பட பிஸினஸ் உள்ளதால், விநியோகஸ்தர்கள் இப்படத்தை வாங்க தயங்குவததாகவும் இதற்குக் காரணம் அஜித்தின் முந்தைய இரு படங்கள் சரியாகப் போகாததே என்று தகவல் வெளியாகிறது.

ஆனால் ரெய் ஜெயிண்ட் மூவிஸ் வாங்கியுள்ளதால் நிச்சயம் இப்படம் வாரிசுக்குப் போட்டியாக இருக்கும் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பாலிவுட் போனது மொத்த கெட்டப்பும் சேஞ்ச் போல… கீர்த்தி சுரேஷின் புகைப்பட தொகுப்பு!

மாடர்ன் உடையில் ஸ்டன்னிங்கான லுக்கில் கலக்கும் அதிதி ஷங்கர்!

இயக்குனர் ஹரியின் படத்தில் நடிக்கிறாரா விஜய் சேதுபதி?

100 ஆவது படத்துக்காக மின்னல் வேகத்தில் செயல்படும் ஜி வி பிரகாஷ்…!

விடுதலை படத்துக்காக புலவர் கலியபெருமாளின் குடும்பத்துக்கு படக்குழு கொடுத்த உரிமைத் தொகை!

அடுத்த கட்டுரையில்
Show comments