Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சூர்யா மற்றும் சசிகுமார் மட்டுமே சமூகக் கண்ணோட்டத்தோடு நடிக்கிறார்கள்.. சுசீந்தரன் பாராட்டு!

Webdunia
புதன், 8 மார்ச் 2023 (08:12 IST)
சசிகுமார், புகழ் மற்றும் போஸ் வெங்கட் உள்ளிட்ட பலர் நடிப்பில் மந்திரமூர்த்தி இயக்கத்தில் டிரைடண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள ‘அயோத்தி’ திரைப்படம். சமீபத்தில் இந்த படம் வெளியாகி பாஸிட்டிவ்வான விமர்சனங்களைப் பெற ஆரம்பித்துள்ளது. அயோத்தியில் இருந்து ராமேஸ்வரத்துக்கு புனிதப் பயணம் வரும் ஒரு குடும்பத்தில் நடக்கும் இறப்பு மற்றும் அது சம்மந்தமான பிரச்சனைகளை மனிதம் கலந்து சொல்லி இருக்கும் இந்த படம் இப்போது பார்வையாளர்களைக் கவர தொடங்கியுள்ளது. இந்த வாரம் வெளியான படங்களில் மற்ற படங்கள் பெரிதாகக் கவராத நிலையில் சசிகுமாருக்கு நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு ஹிட் படமாக இந்த படம் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் படம் பரவலாக பாராட்டுகளைக் குவித்து வரும் நிலையில் இயக்குனர் சுசீந்தரன் படக்குழுவினரைப் பாராட்டியுள்ளார். அதில் “சூர்யா சார் மற்றும் சசிகுமார் போன்றோர்தான் சமூக கண்ணோட்டத்தோடு படம் நடிக்கிறார்கள். மனிதத்தைப் போற்றும் அயோத்தி திரைப்படத்தைப் போற்றுவோம். சிறப்பான திரைப்படம். சசிகுமார் அண்ணனுக்கு என் வாழ்த்துகள்” எனக் கூறியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஏஆர் ரஹ்மானை பிரிந்தது ஏன்? சாய்ரா பானு விளக்கம்..!

என்ன கீர்த்திம்மா இதெல்லாம்..? பாலிவுட்டுக்கு மட்டும் இவ்ளோ தாராளமா? - Unlimited க்ளாமரை கட்டவிழ்த்த கீர்த்தி சுரேஷ்!

தனுஷுடன் சிம்பு, சிவகார்த்திகேயன்! ஆனா நயன்தாராவுக்கு மட்டும் நோ! - வைரல் புகைப்படம்!

உழைக்கும் மக்களுக்கு இன, ஜாதி வெறி வேணாம்.. சிறப்பாக சொன்னது ‘பராரி’! - படக்குழுவை பாராட்டிய திருமாவளவன்!

ரஜினி, விஜய்யை தாண்டி புதிய சாதனை படைத்த சிவகார்த்திகேயன்!

அடுத்த கட்டுரையில்
Show comments