Webdunia - Bharat's app for daily news and videos

Install App

“அஜித் படம் தோல்வி அடைந்தது ஏன்?” – இயக்குநர் விளக்கம்

Webdunia
வெள்ளி, 22 செப்டம்பர் 2017 (12:33 IST)
அஜித் நடிப்பில் வெளியான ‘அசல்’ படம் தோல்வி அடைந்தது இதனால்தான் எனத் தெரிவித்துள்ளார் இயக்குநர் சரண்.



 
அஜித்தை வைத்து ‘காதல் மன்னன்’, ‘அமர்க்களம்’, ‘அட்டகாசம்’ மற்றும் ‘அசல்’ படங்களை இயக்கியவர் சரண். கடைசியாக இயக்கிய ‘அசல்’ படம், அஜித்துக்கு மிகப்பெரிய தோல்வியைக் கொடுத்தது. அதற்கான காரணம் என்னவாக இருக்கும் என்பதை சரணே சொல்கிறார்.

“அஜித் சாருடன் அதற்கு முன் பணியாற்றிய படங்களில் இருந்து, அப்படியே எதிர்மாறான படம் ‘அசல்’. அஜித் சார் மிகப்பெரிய மாஸ் ஹீரோ. ஆனால், ‘பஞ்ச் டயலாக்ஸ் கூட இல்லாமல் வேறு மாதிரி வித்தியாசமாக படம் பண்ணலாமா?’ என்று கேட்டார். டயலாக்ஸ் அதிகம் இல்லாமல், ஸ்டைலிஷான ஹீரோவாக நடிக்க அவர் விரும்பினார். எனவேதான், ‘அசல்’ படத்தின் கதையை முடிவு செய்தோம். ஆனால், ரசிகர்களின் எதிர்பார்ப்பு வேறு மாதிரியாக இருந்தது. எங்களின் முந்தைய படங்களைப் போலவே இருக்கும் என அவர்கள் நினைத்தனர். ஆனால், அதற்கு எதிர்மாறாக இருந்தது படம். அதனால் தான் ‘அசல்’ படம் ஹிட்டாகவில்லை” என்றார் சரண்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

என் அப்பாவின் குரலை AI மூலம் பயன்படுத்த கூடாது: எஸ்பிபி மகன் அறிவிப்பு..!

போர் தொழில் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தனுஷ் நடிக்க இருந்த படம் கைவிடப்பட்டதா?

நயன்தாரா & நெட்பிளிக்ஸ் மீது வழக்குத் தொடர்ந்த தனுஷ்…!

15 ஆண்டுகளாக தொடரும் காதல்… வருங்கால கணவர் பெயரை அறிவித்த கீர்த்தி சுரேஷ்…!

தேவி ஸ்ரீ பிரசாத்தால் ‘குட் பேட் அக்லி’ ரிலீஸில் ஏற்பட்ட மாற்றம்!

அடுத்த கட்டுரையில்
Show comments