Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரஜினியை கலாய்த்த ராம்கோபால் வர்மா : பதிலடி கொடுத்த வெங்கட் பிரபு

Webdunia
புதன், 15 ஜூன் 2016 (17:26 IST)
டிவிட்டரில், ரஜினியை தாக்கி பாலிவுட இயக்குனர் ராம்கோபால் வர்மா தெரிவித்த கருத்து சர்ச்சை கிளப்பியுள்ளது. அதற்கு தமிழ் பட இயக்குனர் வெங்கட் பிரபு பதிலடி கொடுத்துள்ளார்.


 

 
டிவிட்டரில் அவ்வப்போது சர்ச்சையாக கருத்துக்களை தெரிவிப்பது இயக்குனர் ராம்கோபால் வர்மாவுக்கு வழக்காமான ஒன்று. சமீபத்தில் ரஜினியை, அமிதாப்பச்சனுடன் ஒப்பிட்டு சில கருத்துகளை தெரிவித்தார். 
 
அதில் “Te3n படத்தை பார்த்தபின் எனக்கு ஒன்றுதான் தோன்றுகிறது. சிரஞ்சீவி, ரஜினி போன்றவர்கள் அமிதாப்பின் திறமையை புரிந்து வைத்துள்ளார்கள். அமிதாப்பச்சன் தனது திறமையை இன்னும் புரிந்து கொள்ளவில்லை. அவர் அடுத்த கட்டத்திற்கு செல்லவேண்டும்.
 
ரோபோ படத்தில் அமிதாப் நடித்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் அதேபோல், ரஜினி Te3n படத்தில் நடித்தால் அது சுமாராகத்தான் இருக்கும். இதை ரஜினியும் ஒத்துக்கொள்வார் என்று நினைக்கிறேன். 
 
Te3n, பிளாக், பிகு ஆகிய படங்களில் ரஜினி நடித்திருந்தால் அது காமெடியாக இருந்திருக்கும். ரஜினி Te3n படத்தில் நடித்திருந்தால் அது 1. இதுவே அமிதாப் ரோபோவில் நடித்தால் அது 100. இதற்கு ரஜினி பதில் அளிக்கவேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.
 
நான் ரஜினியை நேசிப்பதற்குக் காரணம் அவர் ஏற்படுத்துகிற தாக்கம், அமிதாப்பை நான் நேசிக்கக் காரணம், படங்களின் உள்ளடக்கம். இது ரஜினிக்குப் புரியும். ஏனெனில் நானும் ரஜினியும் அமிதாப்பை ரசிக்கிறோம்” என்று குறிப்பிட்டிருந்தார்.
 
இதைபார்த்து ஏரளமான ரசிகர்கள் கொதிப்படைந்தனர். அவர்கள் ராம்கோபால் வர்மாவின் கருத்துக்கு எதிராக தங்கள் கருத்துகளை பதிவு செய்து வருகிறார்கள். இயக்குனர் வெங்கட் பிரபு  “சார், உங்களால் மட்டுமே ஷோலே படத்தை ஃபிளாப் ஆக்க முடியும். எங்கள் சூப்பர்ஸ்டார் Te3n படத்தில் நடித்தாலும் சாதனை படைப்பார்” என்று பதிலடி கொடுத்துள்ளார்.

 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மணிகண்டன் நடிப்பில் உருவாகும் fam-com ‘குடும்பஸ்தன்’ முதல் பார்வை வெளியீடு!

தூம் 4 படத்தில் கதாநாயகனாகும் ரன்பீர் கபூர்!

கேம்சேஞ்சர் படத்தின் செகண்ட் சிங்கிள் ரிலீஸ் அப்டேட்டை வெளியிட்ட படக்குழு!

அஜித் மட்டும்தான் போன் பண்ணி விசாரித்தார்… அவர் படத்தில் நடிக்க சொன்னார்… பாடகி சுசித்ரா பகிர்ந்த தகவல்!

அருள்நிதி மற்றும் பிரியா பவானி சங்கர் நடிப்பில், ஹாரர் திரில்லர் "டிமான்ட்டி காலனி 2" திரைப்படம், ZEE5 இல் ஸ்ட்ரீமிங் ஆக உள்ளது!

அடுத்த கட்டுரையில்
Show comments