Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பொன்ராம் சினிமாட்டிக் யூனிவர்ஸ்- இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் ரஜினி முருகன் 2!

Webdunia
வெள்ளி, 25 நவம்பர் 2022 (16:09 IST)
இயக்குனர் பொன்ராம் ரஜினி முருகன் 2 திரைப்படத்துக்கான திரைக்கதை வேலைகளில் இறங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நடிகர் சிவகார்த்திகேயனுக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்த திரைப்படம் ‘வருத்தபடாத வாலிபர் சங்கம்’. அந்த படத்தின் மூலம் ரசிகர்களைக் கவர்ந்த இயக்குனர் பொன்ராம், அடுத்து அதே கூட்டணியில் உருவாக்கிய ரஜினிமுருகன் திரைப்படமும் வெற்றிப்படமாக அமைந்தது. இவர்கள் கூட்டணியில் மூன்றாவதாக உருவான சீமராஜா திரைப்படம் தோல்விப் படமாக அமைந்தது.

இதையடுத்து இந்த கூட்டணி பிரிந்தது. இந்நிலையில் இப்போது இயக்குனர் பொன்ராம் இப்போது ரஜினி முருகன் 2 திரைப்படத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளதாகவும். அதில் ரஜினி முருகன் மற்றும் வருத்தப்படாத வாலிபர் சங்கம் ஆகிய படங்களின் கதாபாத்திரங்களை இணைத்து ‘பொன்ராம் சினிமாட்டிக் யூனிவர்ஸ்’ ஆக உருவாக்க திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்த படத்தில் சிவகார்த்திகேயன் மற்றும் சூரி ஆகிய இருவரும் இரட்டை வேடத்தில் நடிக்கும் விதமாகவும், ராஜ்கிரண் மற்றும் சத்யராஜ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிப்பார்கள் என்றும் சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அமெரிக்காவில் இருந்து கோட் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட வெங்கட் பிரபு!

துரை செந்தில்குமார் இயக்கத்தில் லெஜண்ட் சரவணன் நடிக்கும் படம் எப்போது தொடங்கும்? வெளியான தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments