Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஜய் சேதுபதியின் அடுத்த படத்தில் நடிகராக மிஷ்கின்…!

vinoth
புதன், 24 ஜூலை 2024 (16:34 IST)
இயக்குனர் பாண்டிராஜ் தமிழ் சினிமாவின் முக்கியமான கமர்ஷியல் இயக்குனர்களில் ஒருவர். பசங்க படத்தின் மூலம் அறிமுகமான அவர் அடுத்தடுத்து இயக்கிய கடைகுட்டி சிங்கம், நம்ம வீட்டுப் பிள்ளை போன்ற திரைப்படங்கள் பெரியளவில் வெற்றியைப் பெற்றன. கடைசியாக அவர் இயக்கிய ‘எதற்கும் துணிந்தவன்’ திரைப்படம் 2022 ஆம் ஆண்டு ரிலீஸாகி தோல்வி படமாக அமைந்தது.

இதனால் பாண்டிராஜ் தன்னுடைய அடுத்த படத்தின் திரைக்கதையை உருவாக்க ஒரு இடைவெளி எடுத்துக்கொண்டார். திரைக்கதையை எழுதி முடித்த பாண்டிராஜ் இப்போது விஜய் சேதுபதி நடிப்பில் சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் அந்த படத்தைத் தொடங்கவுள்ளார்.

இந்த படத்துக்காக விஜய் சேதுபதி தன்னுடைய சம்பளத்தை அதிரடியாகக் குறைத்துக் கொண்டுள்ளார் என்று தகவல்கள் வெளியாகின. முன் தயாரிப்புப் பணிகள் இந்த படத்துக்காக நடந்து வந்த நிலையில் ஆகஸ்ட் 14 ஆம் தேதி இந்த படத்தின் ஷூட்டிங் தொடங்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் படத்தில் கதாநாயகியாக நடிக்க மலையாள நடிகை நித்யா மேனன் ஒப்பந்தம் ஆகியுள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த படம் குடும்ப செண்ட்டிமெண்ட் படமாக உருவாகவுள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இந்த படத்தில் ஒரு முக்கியமானக் கதாபாத்திரத்தில் இயக்குனர் மிஷ்கினை நடிக்கவைக்க பேச்சுவார்த்தை நடப்பதாக சொல்லப்படுகிறது. தனது கதாபாத்திரம் பற்றி கேட்ட மிஷ்கின், அதில் நடிக்க சம்மதித்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

வாழை பட 25-வது நாள் கொண்டாட்டம் வெற்றி விழா!!

சூர்யா வின் ‘கங்குவா’ ரிலீஸ் தேதி எப்போது? சூப்பர் அறிவிப்பு..!

தனுஷ் விவகாரத்தில் ஃபெப்சி அமைப்பு தலையீடு: தென்னிந்திய நடிகர் சங்கம் கண்டனம்.

’கோட்’ படத்தின் 13 நாள் வசூல்.. தயாரிப்பாளரின் அதிகாரபூர்வ அறிவிப்பு..!

என்னது ரூ.1000 கோடியா? ரூ.500 கோடி கூட வரல.! கோட் படத்தின் வசூல் இவ்வளவுதானா.?

அடுத்த கட்டுரையில்
Show comments