Webdunia - Bharat's app for daily news and videos

Install App

33 நிமிடத்தில் பாட்டெழுதித் தந்த நா.முத்துக்குமார்

Webdunia
செவ்வாய், 23 ஆகஸ்ட் 2016 (12:11 IST)
மறைந்த பாடலாசிரியர் நா. முத்துக்குமார் மேல் நாட்டு மருமகன் படத்திற்காக 33 நிமிடங்களில் பாடல் எழுதிக் கொடுத்ததாக அப்படத்தின் இயக்குனர் எம்.எஸ்.எஸ் கூறினார்.


 

மனோ உதயகுமார் உதயா கிரியேஷன் என்ற பட நிறுவனம் சார்பில் தயாரிக்கும் படம் மேல் நாட்டு மருமகன். இந்த படத்தில் தொலைக்காட்சி புகழ் ராஜ்கமல் நாயகனாக நடிக்கிறார். பிரான்சில் இருந்து ஆண்ட்ரீயன் என்னும் வெள்ளைக்கார பெண் நாயகியாக அறிமுகமாகிறார். மற்றும் வி.எஸ்.ராகவன், அஞ்சலிதேவி, அசோகராஜ், சாத்தையா மற்றும் பலர் நடித்துள்ளனர். கதை, திரைக்கதை, வசனம் எழுதி எம்.எஸ்.எஸ் என்பவர் இயக்குகிறார்.                                               

இப்படம் குறித்து இயக்குனர் கூறுகையில், மேல்நாட்டு மருமகன் செக்ஸ் வன்முறை, என்று இல்லாத குடும்பத்தினருடன் பார்க்க வேண்டிய படம். ராஜ்கமல் - ஆண்ட்ரியன் காதாப்பாத்திரமாகவே வாழ்ந்திருப்பார்கள். இப்படத்தில்  நா, முத்துக்குமார் பாடல் ஒன்றை எழுதியுள்ளார். இந்த படத்திற்காக   நா.முத்துக்குமார் அவர்களிடம் ஒரு பாடல் எழுத கேட்டேன். அதற்கு அவர் முதலில் அமெரிக்கா போகிறேன் வந்து எழுதுகிறேன். அவசரம்னா வேறை யாரையாவது எழுதி தரச்சொல்லி வாங்கிக்குங்க  பிளீஸ் என்றார். நீங்கதான் எழுதனும்னு வற்புறுத்தினேன். நிலைமையை புரிந்த அவர் தனது காரில் என்னை அழைத்துச் சென்று 33 நிமிடத்தில் பாட்டெழுதி கொடுத்துவிட்டார். ஒரு நல்ல கலைஞனை நாம் இழந்துவிட்டோம் என்றார் இயக்குனர்.

"யாரோ யார் இவளோ " சந்தோஷத்தின்  பேர்  இவளா " என்று அருவியாய் வந்த அவரது எழுத்தாற்றல் மிகப்பெரியது.

மேலும் படத்தில் மற்ற பாடலாசிரியர்கள் எழுதிய பாடல்களை கேட்டு, அவர்கள் புதியவர்கள் என்பதையும் அறிந்து மனதார பாராட்டிய அந்த பெருந்தன்மைக்கு இந்த படக்குழு நன்றி சொல்லிக் கொள்கிறது என்றார் இயக்குனர் .எம்.எஸ்.எஸ்   
 

துல்கர் சல்மான் நடிக்கும் லக்கி பாஸ்கர் படத்தின் அப்டேட்டை வெளியிட்ட படக்குழு!

கிங் ஆஃப் கிங்ஸ் எனும் மாபெரும் இசை நிகழ்ச்சியை வரும் ஆகஸ்ட் 17 ஆம் தேதி நடத்த திட்டமிட்டு இருப்பதாக இசையமைப்பாளர் கார்த்திக் ராஜா பேட்டி.

நடிகர் அரவிந்த் சாமிக்கு ரூ.35 லட்சம் சம்பள பாக்கி.. தயாரிப்பாளருக்கு பிடிவாரண்ட்..!

திரை இசை சக்கரவர்த்தி டி ஆர் மகாலிங்கம் நூற்றாண்டு விழா-பி.சுசிலா நாசர் உள்ளிட்ட திரை பிரபலங்கள் பங்கேற்பு!

அக்ஷய் குமார் பெயரை பயன்படுத்தி தமிழ் நடிகை மோசடியா? தயாரிப்பாளரின் அதிர்ச்சி புகார்..!

அடுத்த கட்டுரையில்