Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீரா ஜாஸ்மினுடன் ஒரு படப்பிடிப்பில்கூட மன நிறைவாக பணியாற்றியதே இல்லை: கமல் வேதனை

Webdunia
வியாழன், 8 அக்டோபர் 2015 (16:37 IST)
ரன் படத்தின்மூலம் தமிழில் அறிமுகம் ஆனவர் நடிகை மீரா ஜாஸ்மின். இவர் தமிழ் தவிர மலையாளம், தெலுங்கு மொழிப் படங்களில் நடித்துள்ளார். மலையாள படம் ஒன்றிற்காக தேசிய விருதும் பெற்றவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. அப்படிபட்ட நடிகையால் ஒரு இயக்குனர் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானார் என்று தெரியவந்தபோது அனைவருக்கும் அதிர்ச்சியாகவே இருந்தது.


 

மலையாள பிரபல இயக்குனர் கமல். இவரது இயக்கத்தில் மீரா ஜாஸ்மின் 4 படங்களில் நடித்துள்ளார். இந்த படங்களின் படப்பிடிப்பின்போது இருவருக்கும் மனகசப்பு நிலவியதாக இயக்குனர் கமல் தெரிவித்துள்ளார். பிரபல செய்தி சேனல் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறியபோது,

என் இயக்கத்தில் மீரா ஜாஸ்மின் 4 படங்களில் பணியாற்றியுள்ளார். இதில் ஒரு படப்பிடிப்பில்கூட அவருடன் மன நிறைவாக பணியாற்றியது இல்லை. தவறுகளை நான் சுட்டிக் காட்டியும் அதனை மீரா ஏற்கவில்லை.

கிராமபோன் என்ற படப்பிடிப்பிபோது 3 முறை தேசிய விருது பெற்ற ஆடை வடிவமைப்பாளர் எஸ்.பி.சதீசுடன் சண்டையிட்டு அவர் தேர்வு செய்த ஆடைகளை கிழித்து எறிந்தார். என் இயக்கத்தில் மின்னமின்னிக் கூட்டம் என்ற படமே மீரா இறுதியாக நடித்தது. காரணம் அவர் தனது சகோதரருடன் ஏற்பட்ட மோதல் பிரச்னை அந்த படத்திலும் எதிரொலித்தது. எனவே இனி இவருடன் பணியாற்றபோவதில்லை என அப்படப்பிடிப்பின்போதே முடிவு செய்தேன் என்று தனது வேதனைகளை பகிர்ந்தார்.
 

'சௌகிதார்' எனும் புதிய திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை 'ரோரிங் ஸ்டார்' ஸ்ரீ முரளி வெளியிட்டார்!

அல்லு அர்ஜூன் படம் டிராப்.. அட்லி அடுத்த படத்தின் ஹீரோ இவர்தான்..!

எனக்கும் பொண்ணு கொடுக்க ஆள் இருக்குது: நிச்சயதார்த்த புகைப்படங்களை வெளியிட்ட பிக்பாஸ் பிரதீப்..!

அன்பு, தியாகம், அர்ப்பணிப்பு, ஒற்றுமை .. பக்ரீத் பண்டிகைக்கு வாழ்த்து தெரிவித்த விஜய்..!

கோல்டி கேங் என்னோடு இருக்காங்க.. சல்மான்கானை கொல்வேன்! – மிரட்டல் விடுத்த யூட்யூபர் கைது!

Show comments