Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சச்சின் படத்தின் இரண்டாம் பாகம் வருமா? இயக்குனர் ருசிகர தகவல்!

Webdunia
சனி, 11 ஜூலை 2020 (12:31 IST)
நடிகர் விஜய் மற்றும் ஜெனிலியா ஆகியோ நடிப்பில் 2005 ஆம் ஆண்டு வெளியான் சச்சின் படத்தின் இரண்டாம் பாகம் குறித்து அதன் இயக்குனர் ஜான் மகேந்திரன் தெரிவித்துள்ளார்.

90 களில் காதல் நாயகனாக இருந்த விஜய் ஒரு கட்டத்தில் ஆக்‌ஷன் ஹீரோவாக மாற, அந்த படங்கள் ஹிட்டானதை அடுத்து அந்த ரூட்டிலேயே போய்க் கொண்டிருக்கிறார். அவர் நடிப்பில் ஆக்‌ஷன் காட்சிகள் அதிகமாக இல்லாமல் முழுக்க முழுக்க காதல் மற்றும் நகைச்சுவைக் காட்சிகளோடு உருவான படம் 2005 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் சச்சின்.

இந்த படத்தில் விஜய் மற்றும் ஜெனிலியாவுக்கு இடையிலான காதல் காட்சிகள் மற்றும் வடிவேலு உடனான நகைச்சுவைக் காட்சிகளும் இன்றளவும் ரசிகர்களால் விரும்பி பார்க்கப்பட்டு வருகின்றன. ஆனால் ரிலீஸான சமயத்தில் இந்த படம் பெரிய வெற்றிப்படமாக அமையவில்லை. அப்போது ரிலீஸாகி இருந்த சந்திரமுகி படத்தின் இமாலய வெற்றியால் சச்சின் பெரிதாகக் கவனிக்கப்படவில்லை.

இந்நிலையில் சச்சின் படத்தின் இயக்குனரான ஜான் மகேந்திரன் சமீபத்தில் அளுத்த நேர்காணலில் சச்சின் படத்தின் பார்ட் 2 வருமா என்ற கேள்விக்கு பதிலளித்துள்ளார். அதில் ‘எனக்கும் அந்த விருப்பம் உள்ளது. இப்போது பார்த்தாலும் சச்சின் படத்தின் காட்சிகள் புதுமையாகவும் இளமையாகவும் உள்ளன. நான் இயக்கவில்லை என்றாலும் வேறொரு இயக்குனர் இயக்கினாலும் நான் மகிழ்ச்சி அடைவேன்’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

Pure 90S Vibe GBU மாமே!: அஜித் படத்துல அண்ணன எறக்குறோம்.. ‘அக்கா மக’ டார்கிய உள்ளே கொண்டு வந்த ஆதிக்!

முதல் முதலாக அந்த ஜானரில் படம் பண்ணியுள்ளேன்… இடிமுழக்கம் குறித்து சீனு ராமசாமி பகிர்ந்த தகவல்!

திருமண மேடையில் நான் பட்ட அவமானம்… ஆதங்கத்தை வெளிப்படுத்திய ஷகீலா!

‘ஒத்த ரூபாயும் தரேன்’ மட்டும் இல்ல.. இன்னொரு பழைய பாட்டும் இருக்காம்.. ‘குட் பேட் அக்லி’ சர்ப்ரைஸ்!

‘என்னைப் பாடவேண்டாம் என்று சொன்னார்கள்… ஆனால் நான் பாடும்போது அழ ஆரம்பித்துவிட்டார்கள்’ – இளையராஜா பகிர்ந்த நெகிழ்ச்சி சம்பவம்!

அடுத்த கட்டுரையில்
Show comments