Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஜய்யின் 'லியோ' படத்தை மறந்த லோகேஷ் கனகராஜ் ?ரசிகர்கள் கேள்வி

Webdunia
திங்கள், 11 செப்டம்பர் 2023 (16:33 IST)
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர் லோகேஷ் கனகராஜ். இவர், இயக்கத்தில், மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் ஆகிய படங்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றன.
 

இதையடுத்து, இரண்டாவது முறையாக விஜய்யுடன் இணைந்து பணியாற்றியுள்ள படம் லியோ. வரும் அக்டோபர் 19 ஆம் தேதி  இப்படம் உலகம் முழுவதும் ரிலீஸாகவுள்ளது.

இந்த ஆண்டின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்குரிய திரைப்படமாக அமைந்துள்ள   லியோ படத்தில் விஜய்யுடன் அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா என ஏகப்பட்ட முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர்.

இப்படத்தில் இசை வெளியீட்டு விழா மற்றும் டிரைலர் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது.

இந்த நிலையில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், ரஜினி நடிப்பில் சன்பிக்சர்ஸ் தயாரிப்பில் 'தலைவர் 171' படத்தை சன்பிக்சர்ஸ் தயாரிக்கவுள்ளது. இதுபற்றி அறிவிப்பு இன்று வெளியானது.

இந்த நிலையில், லோகேஷ் கனகராஜின் எக்ஸ் தளத்தில், அவர் இயக்கிய  மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் ஆகிய படங்களை குறிப்பிட்டுள்ளார், ரிலீஸாகவுள்ள 'லியோ' படத்தை குறிப்பிடவில்லை என்பதால் இதுபற்றி ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

ஒருவேளை லியோ படம் ரிலீஸ் ஆனபின் அவர் இப்படங்களுடன் 'லியோ' படத்தையும் சேர்த்துக் கொள்வார் என்று ஒரு தரப்பினர் கூறி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

விடாமுயற்சி திரைப்படம் பொங்கலுக்கு ரிலீஸாகாது… அதிகாரப்பூர்வமாக அறிவித்த லைகா!

விடாமுயற்சி, குட் பேட் அக்லி ரிலீஸ் தாமதமா? ஆதிக் ரவிச்சந்திரன் கொடுத்த அப்டேட்!

நிதி அகர்வாலின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

சம்யுக்தா மேனனின் ஸ்டன்னிங் புகைப்பட தொகுப்பு!

2024 ஆம் ஆண்டில் தமிழ் சினிமாவிற்கு 1000 கோடி ரூபாய் இழப்பு…!

அடுத்த கட்டுரையில்
Show comments