Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’துருவ நட்சத்திரம்’ ரிலீஸ் ஆகிறதா? இல்லையா? தயாரிப்பு நிறுவனத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு..!

Webdunia
வியாழன், 23 நவம்பர் 2023 (19:00 IST)
விக்ரம் நடிப்பில் கௌதம் மேனன் இயக்கத்தில் உருவான துருவ நட்சத்திரம் திரைப்படம் நாளை வெளியாக இருப்பதாக கூறப்பட்ட நிலையில் இன்று வரை இந்த படத்திற்கான முன்பதிவு தொடங்கவில்லை. இதனால் இந்த படம் நாளைய ரிலீஸ் ஆகுமா ஆகாதா என்ற சந்தேகம் இருந்தது. 
 
இந்த நிலையில் துருவ நட்சத்திரம் படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஒன்றாக என்டர்டைன்மென்ட் என்ற நிறுவனம் சற்றுமுன் தனது சமூக வலைதளத்தில் துருவ நட்சத்திரம் முன்பதிவு இன்னும் சில நிமிடங்களில் தொடங்கும் என்று கூறியுள்ளது. 
 
இதனை அடுத்து இந்த படத்திற்கான பிரச்சனைகள் அனைத்தும் தீர்ந்துவிட்டதாகவும் நாளை திட்டமிட்டபடி இந்த படம் ரிலீஸ் ஆகும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் விக்ரம் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
 
விக்ரம், ரிது வர்மா, ஐஸ்வர்யா ராஜேஷ், பார்த்திபன், சிம்ரன், திவ்யதர்ஷினி, விநாயகன், அர்ஜுன் தாஸ், ராதிகா சரத்குமார், வம்சி கிருஷ்ணா உள்பட பலர் நடித்துள்ள  இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ்  இசையமைத்துள்ளார்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

160 கோடி ரூபாய் பட்ஜெட்.. வசூல் 50 கோடிதான்… அப்செட்டில் அட்லி!

கலர்ஃபுல் உடையில் கலக்கலான போஸ் கொடுத்த அதிதி ஷங்கர்..!

க்ரீத்தி ஷெட்டியின் லேட்டஸ்ட் க்யூட் ஃபோட்டோ கலெக்‌ஷன்!

பா விஜய் இயக்கத்தில் ஜீவா, அர்ஜுன் நடிக்கும் ‘அகத்தியா’ .. கவனம் ஈர்க்கும் மிரட்டலான டிசர்!

சசிகுமார் & சிம்ரன் நடிக்கும் ‘டூரிஸ்ட் பேமிலி’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு!

அடுத்த கட்டுரையில்
Show comments