Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் படத் தயாரிப்பில் இறங்கும் தனுஷ்… அடுத்தடுத்து மூன்று படம்?

Webdunia
வெள்ளி, 5 ஆகஸ்ட் 2022 (09:18 IST)
நடிகர் தனுஷ் வுண்டர்பார் பிலிம்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தின் மூலமாக பல படங்களை தயாரித்து வந்தார்.

தனுஷ் தனது சொந்தத் தயாரிப்பு நிறுவனமான வுண்டர்பார் நிறுவனத்தின் மூலம் கடந்த சில ஆண்டுகளாகப் படங்களைத் தயாரித்து வந்தார் தனுஷ். மிகக்குறைந்த காலத்திலேயே இந்நிறுவனத்தின் மூலம் சுமார் 20 படங்களைத் தயாரித்துள்ளார். இதில் ரஜினியின் காலா படமும் அடக்கம். அவர் கடைசியாக தயாரித்த காலா திரைப்படம் மிகப்பெரிய அளவில் அவருக்கு பொருளாதார ரீதியாக நஷ்டமாக அமைந்ததாக சொல்லப்படுகிறது.

தனுஷ் தயாரித்த சிலப் படங்கள் பெரியளவில் நஷ்டத்தை அளித்ததும் மற்றும் அந்நிறுவனத்தில் தனுஷின் நம்பிக்கைக்குப் பாத்திரமாக விளங்கிய சில நிர்வாகிகள் கணக்கு வழக்குகளில் கையாடல் செய்துள்ளதாலும் தனுஷ் பயங்கர அப்செட்டில் இருந்ததாக சொல்லப்பட்டது. இதனால் கடந்த சில வருடங்களாக வுண்டர்பார் நிறுவனம் இயங்கவே இல்லை.

இந்நிலையில் இப்போது மீண்டும் வுண்டர்பார் பிலிம்ஸுக்கு தனுஷ் உயிர் கொடுக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. விரைவில் அடுத்தடுத்து மூன்று படங்களை தனுஷ் தயாரிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

புஷ்பாவால் தள்ளிப்போன இண்டெஸ்டெல்லார் மீண்டும் ரீரிலீஸ்! - நோலன் ரசிகர்கள் ஹேப்பி!

அஜித்குமாரின் கார் ரேஸை இலவசமாக லைவில் பார்ப்பது எப்படி?

எனக்கு யாரும் ரூல்ஸ் போட முடியாது.. எனக்கு புடிச்சத செய்வேன்! - கார் ரேஸ் குறித்து அஜித்குமார் பேட்டி வைரல்!

கிளாமர் லுக்கில் ஐஸ்வர்யா ராஜேஷின் லேட்டஸ்ட் போட்டோஷூட் தொகுப்பு!

கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments