Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாகார்ஜூனாவுடன் நடிக்கும் தனுஷ்!!

J Durai
வெள்ளி, 19 ஜனவரி 2024 (12:27 IST)
தனுஷ், நாகார்ஜுனா, சேகர் கம்முலா, ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் எல்எல்பி, அமிகோஸ் கிரியேஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் இணையும் #DNS படத்தின் வழக்கமான படப்பிடிப்பு பிரமாண்ட பூஜை விழாவுடன் தொடங்கப்பட்டது.
 
நடிகர் தனுஷ் மற்றும் கிங் நாகார்ஜுனா அக்கினேனி இணைந்து ஒரு கலகலப்பான பல்வேறு திரை நட்சத்திரங்கள் கூடும் படைப்பானது #DNS தேசிய விருது பெற்ற இயக்குனர் சேகர் கம்முலாவால் இயக்கப்பட உள்ளது. மேலும் சுனில் நரங் மற்றும் புஸ்குர் ராம் மோகன் ராவ் ஆகியோரால், ஸ்ரீ நாராயண் தாஸ் கே நரங்கின் ஆசீர்வாதத்துடன், ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் எல்எல்பி (ஏசியன் குழுமத்தின் ஒரு பிரிவு) நிறுவனம் சார்பில், அமிகோஸ் கிரியேஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் உடன் இணைந்து, சோனாலி நரங் வழங்க பிரமாண்டமாக தயாரிக்கப்படுகிறது.
 
#DNS (தனுஷ், நாகார்ஜுனா, சேகர் கம்முலா என்பதன் சுருக்கம்) திரைப்படத்தின் பூஜை விழாவில் சுனில் நரங், புஸ்குர் ராம் மோகன் ராவ், பாரத் நரங், ஜான்வி நரங் மற்றும் பலர் கலந்து கொள்ள பிரமாண்டமாக இன்று தொடங்கப்பட்டது. படத்தின் வழக்கமான படப்பிடிப்பு இன்று முன்னணி நடிகர்கள் நடிக்கும் வசனங்கள் நிறைந்த பகுதியின்  படப்பிடிப்புடன் தொடங்கியது. ஹைதராபாத்தில் படப்பிடிப்பு தொடங்கப்பட்டு, முதல் கட்டமாக சில முக்கியமான காட்சிகள் படமாக்கப் பட்டுள்ளன.
 
தனுஷ் மற்றும் நாகார்ஜுனா ஆகியோர்களின்  சங்கராந்தி வெளியீடுகளான கேப்டன் மில்லர் (தமிழ்) மற்றும் நா சாமி ரங்கா மூலம் வெற்றியைடையந்த நிலையில் இப்போது இந்த முன்னணி நடிகர்கள் இணையும் பிரம்மாண்டமான காவியத்தைப் பற்றிய உற்சாகம் பன்மடங்கு அதிகரித்துள்ளது ரசிகர்கள் மத்தியில். ரசிகர்களும் அவர்கள் திரையில் ஒன்று சேர்ந்து  நடிப்பதை காண ஆவலுடன் காத்திருக்கிறார்கள். இப்படத்தில் ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடிக்கிறார்.
 
ஃபிடா மற்றும் லவ் ஸ்டோரி ஆகிய இரண்டு தொடர் வெற்றிப் படங்களை கொடுத்த பிறகு, சேகர் கம்முலா பெரிய அளவிலான படைப்புடன் வருகிறார். தொழில்நுட்பக் குழுவைப் பொறுத்தவரை, நிகேத் பொம்மி ஒளிப்பதிவு செய்ய, ராமகிருஷ்ணா சப்பானி மற்றும் மோனிகா நிகோத்ரே ஆகியோர் தயாரிப்பு வடிவமைப்பைக் கவனிக்க, சர்வதேச சண்டைப் பயிற்சி இயக்குநரான யானிக் பென் ஆக்‌ஷன் பகுதியை மேற்பார்வையிட நியமிக்கப்பட்டுள்ளார். மீதமுள்ள நடிகர்கள் மற்றும் படக் குழுவினரை விரைவில் தயாரிப்பாளர்கள் அறிவிப்பார்கள். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஹாலிவுட்டை எரித்த காட்டுத்தீ! வீடுகளை இழந்து தவிக்கும் ஹாலிவுட் பிரபலங்கள்!

விஷால் பற்றி அவதூறு பரப்பும் ஊடக போர்வை போர்த்திய விஷம நபர்கள்! - விஷால் மக்கள் நல இயக்கம் கண்டனம்!

சென்சார் ஆனது ‘விடாமுயற்சி’ திரைப்படம்.. எப்போது ரிலீஸ்?

விடாமுயற்சி படத்தின் ‘ரன்னிங் டைம்’ பற்றி வெளியான தகவல்!

மகன் படம் ஹிட்டானால் புகைப் பிடிப்பதை விட்டுவிடுகிறேன்… அமீர்கான் உறுதி!

அடுத்த கட்டுரையில்