Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பேண்டஸி கதையில் நடிக்கும் தனுஷ் ! ரெடியான இயக்குனர் !

Webdunia
வியாழன், 23 ஜனவரி 2020 (10:37 IST)
தனுஷ் நடிப்பில் இயக்குனர் ராம்குமார் இயக்க இருக்கும் திரைப்படம் பேண்டஸி ஜானரில் உருவாக இருப்பதாக சொல்லப்படுகிறது.

நடிகர் தனுஷ் இப்போது மாரி செல்வராஜ் இயக்கும் கர்ணன் திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஏற்கனவே அவர் நடிப்பில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கிய சுருளி என்ற படம் ரிலிஸுக்குத் தயாராகியுள்ளது. மாரி செல்வராஜ் படத்துக்குப் பின் தனுஷ் பாலிவுட் படம் ஒன்றில் நடிக்க இருக்கிறார்.

அதன் பின் தனுஷ் நடிக்கும் புதிய படத்தை முண்டாசுப்பட்டி, ராட்சசன் ஆகிய படங்களை இயக்கிய ராம்குமார் இயக்கவுள்ளார். இந்த படத்தின் திரைக்கதையை முடித்துள்ள ராம்குமார் தனுஷுக்கு சொல்லியுள்ளார். பேண்டஸி எனும் மாயஜால வகைத் திரைப்படமாக இந்த படம் உருவாக இருப்பதாக சொல்லப்படுகிறது.

இந்த படத்தில் தனுஷ் சூப்பர் ஹீரோவாக நடிக்க இருக்கிறார் என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

'P T சார்' படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு

எம்.ஜி.ஆர் படத்திற்கு பாடல் எழுதவில்லையே என்ற கலைக்குறை தீர்ந்தது: வைரமுத்து

மதுரையில் பெய்த கனமழை.. வீட்டின் மேற்கூரை இடிந்து இளைஞர் பலி..!

விஜய்க்காக அரசியல் கதையை எழுதிவரும் ஹெச் வினோத்!

அடுத்தடுத்து சூப்பர் ஸ்டார்களை இயக்கும் முருகதாஸ்… பேன் இந்தியா நடிகரோடு கூட்டணி!

அடுத்த கட்டுரையில்
Show comments