Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கஜோலை கொலை செய்வதா? வேண்டாமா? என்பது அவர் நடந்து கொள்ளும் விதத்தில் உள்ளது. தனுஷ்

Webdunia
ஞாயிறு, 9 ஜூலை 2017 (22:22 IST)
தனுஷ் நடிப்பில் செளந்தர்யா ரஜினிகாந்த் இயக்கிய 'விஐபி 2' படத்தின் பிரஸ்மீட் நேற்று சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக மும்பையில் இருந்து கஜோலும் வந்திருந்தார். இந்த நிலையில் இந்த பிரஸ்மீட்டில் பேசிய தனுஷ், 'கஜோல் மேடம் எங்கள் படத்தில் மீண்டும் தமிழுக்கு வந்தது குறித்து எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. வசுந்தரா கேரக்டரை அவர் இல்லாமல் நினைத்து கூட பார்க்க முடியாது



 
 
'விஐபி 2' படத்தை அடுத்த 'விஐபி 3' மற்றும் 'விஐபி 4' ஆகிய படங்களும் கண்டிப்பாக வரும். கஜோல் மேடம் கண்டிப்பாக 3ஆம் பாகத்தில் இருப்பார்கள் என்று நம்புகிறேன். ஆனால் அவர் 3ஆம் பாகத்தில் நடந்து கொள்வதை பொறுத்துதான் அவரது கேரக்டரை கொலை செய்வதா? அல்லது 4வது பாகத்திற்கு எடுத்து செல்வதா? என்பது குறித்து முடிவு செய்வேன்' என்று கூறினார்.
 
'விஐபி' முதல் பாகத்தை போல் இல்லாமல் இந்த படம் வேற உலகம் என்றும், இந்த உலகத்திற்கு கண்டிப்பாக கஜோல் தேவைப்பட்டதாகவும் கூறிய தனுஷ், தேவைப்பட்டால் அடுத்த பாகத்திற்கு அனிருத்தை இசையமைக்க அழைப்பேன்' என்று கூறினார்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

என்ன வரிசையா வறாங்க.. தள்ளிப்போன விடாமுயற்சி! பொங்கலுக்கு படையெடுக்கும் 9 படங்கள்!

சோகத்தில் தள்ளிய ‘விடாமுயற்சி’.. கை கொடுக்க வரும் ‘குட் பேட் அக்லி’! - மகிழ்ச்சியில் அஜித் ரசிகர்கள்!

இன்று வெளியாகிறது டிராகன் படத்தின் முதல் சிங்கிள் பாடல்!

சிம்புவை விட்டு அஜித் பக்கம் செல்கிறாரா தேசிங் பெரியசாமி?

சிவகார்த்திகேயன் 25 படத்தின் டைட்டில் இதுதானா?... பிரபலம் பகிர்ந்த தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments