Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தனுஷ் & ராஜ்குமார் பெரியசாமி இணையும் படத்தில் ஹீரோயினாக ஸ்ருதிஹாசன்!

vinoth
செவ்வாய், 24 டிசம்பர் 2024 (14:00 IST)
சிவகார்த்திகேயன் நடிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் கமல்ஹாசனனின் ராஜ்கமல் இண்டர்நேஷனல் மற்றும் சோனி பிக்சர்ஸ் நிறுவனத் தயாரிப்பில் வெளியான அமரன் திரைப்படம் இந்த ஆண்டின் மிகப்பெரிய கமர்ஷியல் வெற்றியைப் பெற்று 300 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்துள்ளது. இந்த வெற்றி ராஜ்குமார் பெரியசாமியைக் கவனிக்க வைக்கும் இயக்குனராக்கியுள்ளது.

இதையடுத்து அவர் தனுஷ் நடிப்பில் ஒரு புதிய படத்தை இயக்கவுள்ளார். இந்த படத்தை கோபுரம் பிலிம்ஸ் நிறுவனத்தின் மதுரை அன்பு செல்வன் தயாரிக்கவுள்ளார். படப்பிடிப்பு வேலைகள் விரைவில் தொடங்கும் எனவும், மற்ற நடிகர் மற்றும் தொழில்நுட்பக் குழுவினரின் விவரங்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க ஸ்ருதிஹாசனிடம் பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே தனுஷ் மற்றும் ஸ்ருதிஹாசன் ஆகியோர் இணைந்து ‘3’ என்ற படத்தில் இணைந்து நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

முதல்முறையாக இதிகாச படம் எடுக்க போகும் கிறிஸ்டோபர் நோலன்! படத்தலைப்பை கேட்டு ஆச்சர்யத்தில் ரசிகர்கள்!

தியேட்டர் வாசலில் பெண் இறந்த வழக்கு: காவல் நிலையத்தில் அல்லு அர்ஜுன் ஆஜர்..!

கார்த்தி படத்தின் இயக்குனர்.. சூர்யா படத்தில் நடிகர்… தமிழ் பகிர்ந்த தகவல்!

கங்குவா இரண்டாம் பாகம் வந்தால் அனைவருக்கும் பிடிக்கும்.. படத்தில் நடித்த நடிகர் கருத்து!

கிரிக்கெட்டுக்கு எப்படி சச்சினோ… அதுபோல கமர்ஷியல் சினிமாவுக்கு ஷங்கர்- ராம்சரண் புகழ்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments