Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தனுஷின் ராயன் படத்தின் ஆடியோ & டிரைலர் ரிலீஸ் தேதி இதுதான்!

vinoth
திங்கள், 27 மே 2024 (07:37 IST)
தனுஷ் தனது 50 ஆவது படமான ராயன் -ஐ தானே இயக்கி மின்னல் வேகத்தில் ஷூட்டிங்கை முடித்துள்ளார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க, ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார். இந்த படத்தில் தனுஷோடு எஸ்ஜே சூர்யா, காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன், சந்தீப் கிஷன் மற்றும் செல்வராகவன் உள்ளிட்டோர் நடித்து வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.  இந்த படத்துக்காக மொட்டை அடித்து கெட்டப்பை மாற்றிய தனுஷ் மொத்த காட்சிகளையும் 110 நாட்களில் முடித்தார்.

இதில் தனுஷ் அண்ணனாகவும், காளிதாஸ் மற்றும் சந்தீப் கிஷன் ஆகியோர் அவரின் தம்பிகளாகவும் நடிப்பதாகவும் சொல்லப்படுகிறது. மேலும் பாஸ்ட்புட் கடை வைத்திருக்கும் சகோதரர்கள் எப்படி கேங்ஸ்டராக மாறுகிறார்கள் என்பதே கதை என சொல்லப்படுகிறது. இந்த படத்துக்கு ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்திருக்கும் நிலையில் முதல் சிங்கிள் பாடல் நாளை வெளியாக உள்ளது. இந்த படத்தில் செல்வராகவனும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

இந்த படம் ஜூன் 13 ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் இதுவரை இரண்டு பாடல்கள் வெளியாகியுள்ளன. இதையடுத்து படத்தின் ஆடியோ மற்றும் டிரைலர் ஜூன் 2 ஆம் தேதி சென்னையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் நடக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தாயின் மாரை அறுத்து எப்படி சாப்பிட முடியும்… வணங்கான் விழாவில் சூர்யாவுக்காக கொந்தளித்த சசிகுமார்!

ஆகாஷ் முரளி & அதிதி நடிப்பில் உருவாகும் ‘நேசிப்பாயா’ பட ரிலீஸ் எப்போது?

அமரனுக்கு நம்பிக்கை கொடுத்த பிதாமகன்… பாலா 25 நிகழ்ச்சியில் சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி!

இந்தியில் மட்டும் 600 கோடி ரூபாய் வசூல்… அனைத்து சாதனைகளையும் உடைத்த புஷ்பா 2!

பாலா நிறைய படம் பண்ணுங்க… வணங்கான் மேடையில் மணிரத்னத்தின் அட்வைஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments