Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இரண்டாவது வாரத்தில் காத்து வாங்கும் ராயன் காட்சிகள்!

vinoth
வியாழன், 1 ஆகஸ்ட் 2024 (07:52 IST)
நடிகர் தனுஷ் நடித்து, இயக்கியுள்ள அவரின் 50 ஆவது படமான ராயன் கடந்த வாரம் வெளியான நிலையில் நிலையில் படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வந்துகொண்டிருக்கின்றன. படத்தில் தனுஷோடு சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், எஸ் ஜே சூர்யா மற்றும் துஷாரா விஜயன் ஆகியோர் நடித்துள்ளனர். ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்க, ஓம்பிரகாஷ் ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார்.

படம் வெளியாகி முதல் நாளில் தமிழகத்தில் மட்டும் முதல் நாளில் 12.5 கோடி ரூபாய் அளவுக்கு வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகின. இது வழக்கமாக தனுஷ் படங்கள் செய்யும் கலெக்‌ஷனை விட அதிகம். அடுத்தடுத்த விடுமுறை நாட்களிலும் இந்த படத்தின் வசூல் சிறப்பாக அமைந்துள்ளதாக தெரிகிறது. இதனால் முதல் மூன்று நாட்களில் இந்த படத்தின் கலெக்‌ஷன் 70 கோடி ரூபாய் அளவுக்கு ஆகியுள்ளதாக சொல்லப்படுகிறது.

முதல் வார இறுதியில் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிய ராயன், இரண்டாவது வாரத்தில் மிகப்பெரிய அளவில் வசூல் சரிவை அடைந்துள்ளதாக சொல்லப்படுகிறது. பெரும்பாலானக் காட்சிகள் ரசிகர்கள் இல்லாமல் மிகக்குறைந்த பார்வையாளர்களோடு ஓடி வருகின்றன. இதற்குப் படம் சம்மந்தமாக வந்த எதிர்மறை விமர்சனங்களே காரணம் என சொல்லப்படுகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஹேமா கமிஷனில் வாக்குமூலம் அளித்த 20 சாட்சிகள்.. சிக்கலில் திரையுலக பிரபலங்கள்..!

தனுஷின் 52வது படத்தின் டைட்டில் இதுதான்.. இசையமைப்பாளர் யார்?

நடிகைகள் குறித்து அவதூறுப் பேச்சு: மன்னிப்பு கோரினார் டாக்டர் காந்தராஜ்

அனிகா சுரேந்திரனின் லேட்டஸ்ட் வைரல் போட்டோஷூட் ஆல்பம்!

கிளாமர் உடையில் துஷாராவின் ஸ்டைலிஷான போட்டோஷூட் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments