Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஓடிடியில் ரிலீஸ் செய்தால் ரூ.10 கோடி நஷ்டம்: என்ன செய்ய போகிறார் தனுஷ் பட தயாரிப்பாளர்?

Webdunia
வியாழன், 27 ஆகஸ்ட் 2020 (08:04 IST)
கடந்த 4 மாதங்களுக்கு மேலாக திரையரங்குகள் திறக்கப்படாததால் ஓடிடியில் சின்ன பட்ஜெட் படங்கள் முதல் பெரிய பட்ஜெட் படங்கள் வரை ரிலீசாகி வருகின்றன என்பது தெரிந்ததே
 
சூரரைப்போற்று, சக்ரா உள்பட பல பெரிய பட்ஜெட் படங்களும் ஓடிடியில் ரிலீஸாக உள்ள நிலையில் தனுஷ் நடித்த ’ஜகமே தந்திரம்’ திரைப்படமும் ஓடிடியில் ரிலீஸாக பேச்சுவார்த்தை கிட்டத்தட்ட முடிந்து விட்டதாகவே கூறப்படுகிறது 
 
ஆனால் இந்த படத்தை ஓடிடியில் ரிலீஸ் செய்தால் அந்த படத்தின் தயாரிப்பாளருக்கு ரூபாய் 10 கோடி நஷ்டம் ஏற்படும் என்று கூறப்படுகிறது. ஜகமே தந்திரம் படத்தின் பட்ஜெட் தொகையை விட அதிக தொகையை தருவதாக ஒடிடி நிறுவனம் தெரிவித்தாலும் இந்த படத்திற்கு இங்கிலாந்து அரசு ரூபாய் 10 கோடி மானியம் தருவதாக அறிவித்து இருந்தது
 
ஆனால் அந்த மானியம் பெற வேண்டுமானால் இந்த படம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆக வேண்டும்.  ஓடிடியில் ரிலீசானால் ரூபாய் 10 கோடி மானியம் கிடைக்காது என்பதால் ஓடிடியில் இந்த படத்தை ரிலீஸ் செய்யமாலா? அல்லது திரையரங்குகள் திறக்கப்படும் வரை காத்திருந்து திரையரங்குகளில் ரிலீஸ் செய்யலாமா என்ற குழப்பத்தில் தயாரிப்பாளர் இருப்பதாக கூறப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

‘வீர தீர சூரன்' ரிலீஸ் தேதி: அதிகாரபூர்வமாக அறிவித்த தயாரிப்பு நிறுவனம்..!

அவர் இல்லைன்னா உயிரே போயிருக்கும்! காப்பாற்றிய ஆட்டோ டிரைவரை அழைத்து நன்றி சொன்ன சயிஃப் அலிகான்!

ஐஸ்வர்யா ராஜேஷின் லேட்டஸ்ட் க்யூட் போட்டோஷூட்!

வில்லன் ஆகிறாரா ஜீவா?… கார்த்தி 29 படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்!

கோட்டை விட்ட கேம்சேஞ்சர்… வசூல் மழைப் பொழியும் வெங்கடேஷ் படம்.. 200 கோடியா?

அடுத்த கட்டுரையில்
Show comments