Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தனுஷ் பட புதிய அப்டேட்!

Webdunia
வியாழன், 17 ஜூன் 2021 (19:35 IST)
தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ஜகமே தந்திரம் படம் ரிலீசாக வுள்ள நிலையில் நாளை காலையில் இப்படம் ரிலீஸாகும் எனக் கூறப்படுகிறது.
 

தனுஷ் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில ஜகமே தந்திரம் படம் தயாராகி ஜூன் 18 ஆம் தேதி நெட்பிளிக்ஸில் வெளியாக உள்ளது. வொய் நாட் ஸ்டுடியோஸ் நிறுவனம் மற்றும் ரிலையன்ஸ் என்டேர்டைன்மெண்ட்ஸ் நிறுவனம் இணைந்து இப்படத்தினை தயாரிக்கின்றனர்.

தனுஷிற்கு ஜோடியாக மலையாள நடிகை ஐஸ்வர்யா லக்ஷ்மி இப்படத்தில் நடிக்கின்றனர். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இப்படத்தில் பிரபல ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ மற்றும் மலையாள நடிகர் ஜோஜு ஜார்ஜ் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.

இந்நிலையில் இந்த படம் 190 நாடுகளில், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி, ஆங்கிலம், பிரஞ்ச், ஜெர்மன், இத்தாலியன், போலிஷ், போர்ச்சுகீஸ், பிரேசிலியன், ஸ்பானிஷ் (காஸ்ட்டிலியன்), ஸ்பானிஷ் (நியூட்ரல்), தாய், இந்தோனேசியன், வியட்நாமிஸ் ஆகிய மொழிகளில் வெளியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகி ட்ரெண்டிங்கில் வைரலாகி வருகிறது.

கடந்த மே மதமே வெளியாகவேண்டிய இந்த படம் கொரோனா பெருந்தொற்றினால் ரிலீஸ் தேதி தள்ளிச்சென்றது. தியேட்டர்களில் வெளியாகவில்லை என்றாலும் 17 மொழிகளில் ஜகமே தந்திரம் வெளியாகப்போவதை கேட்டு தனுஷ் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

இந்நிலையில், சுருளியாக தனுஷ் நடித்துள்ள, 2 மணி நேரம் 37 நிமிடம் ஓடக்கூடிய  ஜகமே தந்திரம் படம் நாளை(18 ஆம் தேதி)  ரிலீஸாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ள நிலையில்  இந்தியாவில் நண்பகல் 12: 30 மணிக்கும் அமெரிக்காவில் அதிகாலை 12 மணிக்கும், இங்கிலாந்தில் காலை 8 மணிக்கும்ம், ஜப்பானில் மாலை 4 மணிக்கும், இப்படம் வெளியாகும் எனக் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், தனுஷ் ரசிகர்கள் தனுஷின் coomon dp உருவாக்கியுள்ளனர். இதை இப்படத்தின் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இது வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

வாழை பட 25-வது நாள் கொண்டாட்டம் வெற்றி விழா!!

சூர்யா வின் ‘கங்குவா’ ரிலீஸ் தேதி எப்போது? சூப்பர் அறிவிப்பு..!

தனுஷ் விவகாரத்தில் ஃபெப்சி அமைப்பு தலையீடு: தென்னிந்திய நடிகர் சங்கம் கண்டனம்.

’கோட்’ படத்தின் 13 நாள் வசூல்.. தயாரிப்பாளரின் அதிகாரபூர்வ அறிவிப்பு..!

என்னது ரூ.1000 கோடியா? ரூ.500 கோடி கூட வரல.! கோட் படத்தின் வசூல் இவ்வளவுதானா.?

அடுத்த கட்டுரையில்
Show comments