Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் இயக்குனர் ஆகும் தனுஷ்… பிரபல தயாரிப்பாளருக்காக எடுத்த முடிவு!

Webdunia
புதன், 21 செப்டம்பர் 2022 (15:19 IST)
பிரபல பைனான்சியர் அன்புச்செழியன் தயாரிக்கும் படத்தில் தனுஷ் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான ஹரிஷ் கல்யாண், ரைசா நடித்த காதல் படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இந்த படத்தை யுவன் தயாரிக்க புதுமுக இயக்குனர் இளன் இயக்கி இருந்தார். இந்நிலையில் இப்போது மீண்டும் யுவன் , ஹரிஷ் கல்யாண் மற்றும் இளன் கூட்டணியில் புதிய ஸ்டார் என்ற படம் அறிவிக்கப்பட்டு அதன் சில போஸ்டர்களும் வெளியாகின.       

ஆனால் படம் அடுத்த கட்டம் நோக்கி நகரவில்லை. இந்நிலையில் அந்த படம் கைவிடப்பட்டுள்ளதாகவும், இப்போது இயக்குனர் இளன் தனுஷை வைத்து ஒரு படத்தை இயக்க உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க இருந்தது. ஆனால் அவர்களுக்கு கதையில் திருப்தி இல்லாததால் தயங்கியுள்ளனர். ஆனால் கதையில் முழு நம்பிக்கை வைத்த தனுஷ் அதே கதையை பைனான்சியரும் தயாரிப்பாளருமான மதுரை அன்பு செழியனிடம் சொல்லி அவரை தயாரிக்கும் படி சொல்லி சம்மதம் வாங்கியுள்ளாராம்.

ஆனால் இப்போது இந்த கூட்டணியும் கைகூடவில்லை. இந்த படத்தில் இருந்து இளன் விலகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் இப்போது அந்த படத்தை தனுஷே இயக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. தனுஷ் ஏற்கனவே பவர் பாண்டி என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

ரித்திகா சிங்கின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் லுக் போட்டோஷூட் ஆல்பம்!

ஸ்கின் கலர் ட்ரஸ்ஸில் ஜான்வி கபூரின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

சுதா கொங்கரா & துருவ் விக்ரம் படத்தை தயாரிப்பது யார்? வெளியான தகவல்!

ரி ரிலீஸ் பட்டியலில் இணைந்த சூர்யா & தனுஷின் சூப்பர்ஹிட் படங்கள்!

நயன்தாராவின் மலையாள பட பூஜை புகைப்படங்கள்… இணையத்தில் வைரல்!

அடுத்த கட்டுரையில்
Show comments