Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தனது 50 ஆவது படத்தின் ஷூட்டிங்கை முடித்த தனுஷ்… தயாரிப்பாளருக்கு நன்றி!

Webdunia
வெள்ளி, 15 டிசம்பர் 2023 (08:56 IST)
கேப்டன் மில்லர் படத்தின் ஷூட்டிங்கை முடித்துள்ள தனுஷ் அடுத்து தனது 50 ஆவது படத்தை தானே இயக்கி வருகிறார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாக தெரிகிறது. ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார்.

இந்த படத்தில் தனுஷோடு எஸ்ஜே சூர்யா, காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன், சந்தீப் கிஷன், அமலா பால் மற்றும் செல்வராகவன் உள்ளிட்டோர் நடித்து வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.  இந்த படத்துக்காக மொட்டை அடித்து கெட்டப்பை மாற்றியுள்ள தனுஷ் ஷூட்டிங்கை விறுவிறுப்பாக மேற்கொண்டு வருகிறார் தனுஷ்.

இந்நிலையில் இப்போது படத்தின் மொத்த ஷூட்டிங்கையும் தனுஷ் நிறைவு செய்துள்ளார். இது சம்மந்தமாக அவர் டிவிட்டரில் “என்னுடைய குழுவினர் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள். கலாநிதி மாறன் அவர்களுக்கும் சன் பிக்சர்ஸ் நிறுவனத்துக்கும் மிகப்பெரிய நன்றி, என்னுடைய கனவுக்கு துணை நின்றதற்காக” எனக் கூறியுள்ளார். இந்த படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் கோடை விடுமுறையை முன்னிட்டு ரிலிஸ் ஆகும் என சொல்லப்படுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

விடாமுயற்சி திருவினையாக்கும்.. செகண்ட் லுக் போஸ்டர் ரிலீஸ்.. அஜித் ரசிகர்கள் குஷி..!

பிரபல இயக்குனருக்கு இப்படி ஒரு நோயா? – நிகழ்ச்சி ஒன்றில் வெளிப்படுத்திய கரண் ஜோஹர்!

இன்று ‘தல’ தோனி பிறந்தநாள்! சல்மான் கானோடு கொண்டாடிய தோனி! - வைரலாகும் வீடியோ!

மாடர்ன் உடையில் ஸ்டைலான போஸ்களில் திவ்யா துரைசாமி… லேட்டஸ்ட் ஆல்பம்!

கிளாமர் உடையில் ஸ்டன்னிங்கான போஸ் கொடுத்த யாஷிகா ஆனந்த்!

அடுத்த கட்டுரையில்
Show comments