Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தனுஷின் கட்டுப்பாட்டில் ரஜினி?

Webdunia
திங்கள், 7 ஆகஸ்ட் 2017 (12:03 IST)
தன் மருமகன் தனுஷின் கட்டுப்பாட்டுக்குள் ரஜினி வந்துள்ளதாக கூறப்படுகிறது.


 

 

 
எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும், எவ்வளவு பணம் இருந்தாலும்… வயதானபிறகு யாருடைய தயவாவது தேவைப்படும். ரஜினி மட்டும் இதில் விதிவிலக்கா என்ன? இரண்டு மகள்களைப் பெற்ற ரஜினி, மூத்த மருமகன் தனுஷ் சொல்படிதான் நடந்து கொள்கிறார் என்கிறார்கள். விவாகரத்துபெற்ற இளைய மகள் செளந்தர்யாவும் தனுஷ் பக்கம்தான் என்பதால், போயஸ் கார்டன் வீட்டில் தனுஷின் கொடி மட்டும்தான் பறக்கிறதாம்.

பா.இரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் ‘காலா’ படத்தைத் தயாரிக்கும் தனுஷ், அடுத்த படத்தையும் அவரே தயாரிக்கிறார். தனுஷுக்கு மிகவும் நெருக்கமான இயக்குநரான வெற்றிமாறன், அந்தப் படத்தை இயக்கப் போகிறார். ஏற்கெனவே ரஜினியிடம் கதையைச் சொல்லிவிட்டார் வெற்றிமாறன். ‘காலா’ ஷூட்டிங் முடிந்தவுடன் அடுத்த படம் தொடங்கும் என்கிறார்கள்.

ரஜினியின் அரசியல் ஆசையையும் அணைபோட்டு தடுத்து வைத்திருப்பது தனுஷ் தான் என்கிறார்கள். ‘நல்லா இருக்கும்போதே நாலு காசு சம்பாதிங்க. அரசியல்லயும் சம்பாதிக்கலாம். ஆனால், தேவையில்லாம விமர்சனங்கள் வரும். அதனால், சினிமாவிலேயே முடிந்த மட்டும் சம்பாதிக்கப் பாருங்க’ என ரஜினிக்கு அட்வைஸ் செய்துள்ளாராம் தனுஷ்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஈட்டி இயக்குனரின் படத்தின் மூலம் தயாரிப்பாளராக மீண்டும் களமிறங்கும் விஷால்.. கதாநாயகி இவர்தான்!

சர்ச்சைகள்… நெகட்டிவ் விமர்சனம் இருந்தும் வசூலில் சாதனை படைத்த ‘எம்புரான்’!

விக்ரம் & மடோன் அஸ்வின் படத்தின் தலைப்பு இதுதான்… மாவீரன் படத்தோடு இருக்கும் கனெக்‌ஷன்!

அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ டிரைலர் எப்போது?... வெளியானது தகவல்!

பஹத் பாசில் & வடிவேலு நடிக்கும் ‘மாரீசன்’ படத்தின் ரிலீஸ் தேதி அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments