Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இரண்டாம் பாக சீசனை குத்தகைக்கு எடுத்து கொண்ட தனுஷ்

Webdunia
திங்கள், 27 பிப்ரவரி 2017 (22:44 IST)
தமிழ் சினிமாவில் தற்போது இரண்டாம் பாகம் சீசன் நடந்து வருகிறது. எந்திரன், விஸ்வரூபம் உள்பட பல படங்களின் இரண்டாம் பாகங்களின் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் நடிகர் தனுஷ் இரண்டாம் பாக சீசனை குத்தகைக்கு எடுத்து கொண்டது போல் ஒரே நேரத்தில் மூன்று இரண்டாம் பாக படங்களில் நடிக்கவுள்ளார்.




தனுஷ் நடித்த ‘வேலையில்லா பட்டதாரி’ (வி.ஐ.பி), ‘மாரி’, ‘கொடி‘ ஆகிய மூன்று படங்களும் நல்ல வெற்றியை பெற்ற நிலையில் தற்போது இந்த மூன்று படங்களுமே இரண்டாம் பாகங்களாக உருவாகவிருக்கிறது. இதில் ‘வேலையில்லா பட்டதாரி’ படத்தின் இரண்டாம் பாகத்தை ரஜினியின் இளைய மகள் சவுந்தர்யா ரஜினிகாந்தும், ‘மாரி’ படத்தின் இரண்டாம் பாகத்தை முதல் பாகத்தை இயக்கிய பாலாஜி மோகனும், கொடி’ படத்தின் இரண்டாம் பாகத்தை அதன் முதல் பாகத்தை இயக்கிய துரை செந்தில்குமாரும் இயக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு ‘விஐபி-2’, ‘மாரி-2’, ‘கொடி-2’ என்று மூன்று படங்களின் இரண்டாம் பாகங்களில் தனுஷ் ஒரே நேரத்தில் நடிக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அவர் ‘பவர் பாண்டி’ என்ற படத்தையும் இயக்கி வருவதோடு, கவுதம் மேனன் இயக்கத்தில் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ படத்திலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கருப்பு வெள்ளை கௌனில் தேவதை லுக்கில் பூஜா ஹெக்டே..!

சிவப்பு நிற சேலையில் அசரடிக்கும் அழகியாய் ஜொலிக்கும் திவ்யபாரதி.. லேட்டஸ்ட் புகைப்படத் தொகுப்பு!

ப்ரதீப்புக்கு ராஜயோகம்! தொட்ட படமெல்லாம் ஹிட்டு! – ‘ட்ராகன்’ கதற கதற பிளாக்பஸ்டர்!

பிரதீப்பின் ‘டிராகன்’ படத்தின் அதிரி புதிரி ஹிட்டால் பிரசாந்த் நீல் படத்துக்கு வந்த சிக்கல்!

விடாமுயற்சி கதைக்காக ஹாலிவுட் தயாரிப்பு நிறுவனத்துக்குக் கொடுக்கப்பட்ட தொகை இவ்வளவா?... வெளியான தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments