Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இதுவரை இல்லாத பிரம்மாண்ட பட்ஜெட்… தனுஷ் 50 படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்!

Webdunia
வியாழன், 19 ஜனவரி 2023 (16:41 IST)
தமிழ் சினிமாவின் திறமைமிகு நடிகர்களில் ஒருவரான  தனுஷ், ‘பவர் பாண்டி’ மூலம் இயக்குநராகவும் தன்னை நிரூபித்துக் காட்டினார். அறிமுகமான முதல் படத்திலேயே சிறந்த இயக்குநர் என்றும் பெயரெடுத்தார்.  இதை அடுத்து இயக்கும் படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்கப் போவதாக அறிவித்தது. ஆனால் அந்த படம் சில நாட்கள் ஷூட்டிங் நடந்த நிலையில் நிறுத்தப்பட்டது.

அதன் பின்னர் நடிப்பில் கவனம் செலுத்திய தனுஷ் இப்போது மீண்டும் இயக்குனர் அவதாரம் எடுக்க உள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரிக்க உள்ள இந்த படத்தின் அறிவிப்பு நேற்று வெளியானது.

இந்த படத்தில் தனுஷோடு விஷ்ணு விஷால், காளிதாஸ் ஜெயராம் மற்றும் எஸ் ஜே சூர்யா ஆகியோர் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த படத்தின் ஷூட்டிங் ஏப்ரல் மாதம் தொடங்கும் என சொல்லப்படுகிறது. தனுஷ் இப்போது கேப்டன் மில்லர் ஷூட்டிங்கில் கவனம் செலுத்தி வருகிறார்.

இந்நிலையில் இந்த படத்தின் பட்ஜெட் 100 கோடி ரூபாய் என திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இதுவரை தனுஷின் படத்துக்கு இல்லாத அளவுக்கு பிரம்மாண்டமாக தனுஷ் 50 படம் உருவாகும் என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தமிழ் சினிமாவில் மாஸ் நடிகர்களை இயக்க இயக்குனர்கள் இல்லை… ரஜினி பேச்சு!

ஓடிடி விற்பனையில் புதிய சாதனை… எந்த தமிழ்ப் படமும் தொடாத உயரத்தைத் தொட்ட ‘தக்லைஃப்’!

சிவாஜி சார் இருந்திருந்தா அவர்தான் அந்த கதாபாத்திரத்துல நடிச்சிருப்பார்.. வேட்டையன் பட விழாவில் ரஜினி பேச்சு!

‘ஞானவேல் சார் எனக்கு மெஸேஜ் சொன்னா புடிக்காது’… வேட்டையன் கதை பற்றி ரஜினி பகிர்ந்த தகவல்!

'நேச்சுரல் ஸ்டார்' நானி - இயக்குநர் ஸ்ரீகாந்த் ஓடேலா - தயாரிப்பாளர் சுதாகர் செருகுரி - எஸ் எல் வி சினிமாஸ் கூட்டணியில் தயாராகும் '#நானிஓடெல்லா 2'

அடுத்த கட்டுரையில்
Show comments