Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தன் மகளை விஜய் மகன் சஞ்சய்யோடு நடிக்க வைக்க ஆசைப்படும் தேவயானி கணவர்!

Webdunia
வெள்ளி, 14 ஜூலை 2023 (09:53 IST)
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரம் விஜய். அவரின் மகன் ஜேசன் சஞ்சய் கனடாவில் திரைப்பட இயக்கம் சம்மந்தமான படிப்பை முடித்துள்ளார். அதனால் அவர் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாவதற்கு வாய்ப்புகள் உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் இப்போது சஞ்சய் கனடாவில் “புல் தி டிரிகர்” என்ற குறும்படத்தை இயக்கியுள்ளதாக சொல்லப்படுகிறது. இது சம்மந்தமான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி கவனம் பெற்றுள்ளன.

இந்நிலையில் அடிக்கடி அவர் ஹீரோவாக நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை கிளப்பி வருகின்றன. ஆனால் அதிகாரப்பூர்வமாக அதுபற்றி எந்த தகவலும் வெளியாகவில்லை. இந்நிலையில் பிரபல இயக்குனரும் நடிகை தேவயானியின் கணவருமான ராஜகுமாரன் தன் மகளை விஜய் மகனுக்கு கதாநாயகியாக அறிமுகப்படுத்த வேண்டும் என ஆசைப்படுவதாக ஒரு நேர்காணலில் கூறியுள்ளார்.

ராஜகுமாரன் – தேவயானி தம்பதிகளின் மூத்த மகளான இனியா இப்போது கல்லூரியில் படித்து வரும் நிலையில் நீ வருவாய் என படத்தின் இரண்டாம் பாகத்தில் அறிமுகப்படுத்த ஆசைப்படுவதாகக் கூறியுள்ளார்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பிக்பாஸ் லாஸ்லியாவின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

ஸ்டைலிஷ் உடையில் சம்யுக்தாவின் லேட்டஸ்ட் போட்டொஷூட் ஆல்பம்!

ஆளே அடையாளம் தெரியாமல் மாறிய விஜய்சேதுபதி… கவனம் ஈர்த்த பிக்பாஸ் ப்ரோமோ!

லவ் மேரேஜா? அரஞ்சுட் மேரேஜா?... நோ மேரேஜ் – கவனம் ஈர்க்கும் ஒன்ஸ்மோர் டீசர்!

மேம்பட்ட மனிதராக பயணம்தான் சிறந்த வழி: நடிகர் அஜித் வீடியோ வெளியீடு

அடுத்த கட்டுரையில்
Show comments