Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தேவரா முதல் பாகத்துக்கு எழுந்த நெகட்டிவ் விமர்சனங்கள்.. இரண்டாம் பாகத்தில் நடக்கும் அதிரடி மாற்றங்கள்!

vinoth
வியாழன், 30 ஜனவரி 2025 (07:07 IST)
தெலுங்கு திரையுலகின் முன்னணி இயக்குனரான கொரடலா சிவா இயக்கத்தில்  ஜூனியர் என்டிஆரின்  30 ஆவது படமான ‘தேவரா’கடந்த ஆண்டு செப்டம்பர் 27 ஆம் தேதி ரிலீஸ் ஆனது. ஆர் ஆர் ஆர் படத்துக்குப் பின் என் டி ஆர் நடித்த படம் என்பதால் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ரிலீஸானது.

இரண்டு பாகங்களாக உருவான படத்தின் முதல் பாகம் வெளியான முதல் காட்சியிலேயே நெகட்டிவ் விமர்சனங்கள் எழ ஆரம்பித்துள்ளன. பல காட்சிகள் இணையத்தில் ட்ரோல் ஆகின. ஆனாலும் படம் திரையரங்குகள் மூலமாக மொத்தம் 500 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்துள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனால் படத்தின் பட்ஜெட்டோடு ஒப்பிட்டால் இது லாபம் தரும் வசூல் இல்லை என்று சொல்லப்பட்டது.

இந்நிலையில் இரண்டாம் பாகத்தில் இப்போது பெரிய அளவில் மாற்றங்கள் நடந்து  வருவதாக சொல்லப்படுகிறது. வட இந்திய ரசிகர்களை வெகுவாகக் கவர்வதற்காகவும், முதல் பாகத்துக்கு வந்த விமர்சனங்களை கருத்தில் கொண்டும் இந்த மாற்றங்களை இயக்குனர் சீனு செய்து வருவதாக சொல்லப்படுகிறது. இரண்டாம் பாகத்தின் ஷூட்டிங் இந்த ஆண்டு இறுதியில் தொடங்கலாம் என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நாக்கில் குங்குமப்பூ.. ஷாருக்கான், அஜய்தேவ்கன் மீது வழக்கு!

ரகுல் ப்ரீத் சிங்கின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

மஞ்சள் உடையில் க்யூட் லுக்கில் கலக்கும் திவ்யபாரதி!

அஜித் படத்தைத் தனுஷ் இயக்க வாய்ப்பே இல்லை… பிரபலத் தயாரிப்பாளர் உறுதி!

ஜெய் ஒரு ப்ளேபாய்… ஊமைக் குசும்பன்… பிரபல நடிகை ஓபன் டாக்!

அடுத்த கட்டுரையில்
Show comments