ரஜினி, கமல், அஜித், விஜய் போன்ற மாஸ் ஸ்டார்களுக்கு பேனர் வைப்பது, போஸ்டர் ஓட்டுவது என அந்தந்த ரசிகர்கள் ஈடுபடுவதை பார்த்திருக்கின்றோம். ஆனால் முதல்முறையாக சீரியல் நடிகை ஒருவருக்கு அதுவும் வில்லியாக நடிக்கும் நடிகை ஒருவருக்கு நற்பணி மன்றம், பிளக்ஸ் போர்டு ஆகியவை வைக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
அந்த அதிர்ஷ்டசாலி நடிகை பிரபல தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகும் 'தெய்வமகள்' சீரியலில் நடிக்கும் காயத்ரிதானாம். இந்த சீரியலில் ஜெய்ஹிந்த் விலாஸின் மூத்த மருமகள் கேரக்டரில் நடிக்கும் காயத்ரி செய்யும் கிரிமினலான வில்லத்தனம் சீரியல் பார்க்கும் இல்லத்தரசிகளுக்கு கோபத்தை ஏற்படுத்தினாலும் ஃபேஸ்புக், டுவிட்டரில் இவருக்கு ஏகப்பட்ட ஆண் ரசிகர்களாம்
அவர்கள் தான். இப்படி வில்லியாக இருக்கும் காய்த்ரிக்கு ஃபேஸ்புக், டுவிட்டரில் வாழ்த்துக்கள் தெரிவிப்பதோடு, அண்ணியார் காயத்ரியின் விழுதுகள் என்று போட்டு காயத்ரி நற்பணி மன்றம் நடத்தி வருவதாகவும், ஒருசில இடங்களில் பேனர்கள் வைத்திருப்பதாகவும் செய்திகள் வெளிவருகின்றனர். தமிழக இளைஞர்கள் தற்போது மாஸ் நடிகர்களை போல சீரியல் நடிகைகளுக்கு சீரியஸாக ரசிகர் மன்றம் ஆரம்பித்துள்ளதால் தமிழகம் எங்கே செல்கிறது என சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.