Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஸ்க்விட் கேம்ஸ் சீரிஸின் ஆங்கில ரீமேக்கை இயக்கும் ஹாலிவுட் இயக்குனர் டேவிட் பின்ச்சர்!

vinoth
வியாழன், 31 அக்டோபர் 2024 (09:20 IST)
கொரியன் சினிமா மற்றும் சீரிஸ்களுக்கு உலக அளவில் ரசிகர்கள் உண்டு. ஹாலிவுட் சினிமாக்களுக்கு பின்னர் அதிக ரசிகர்களைக் கொண்ட சினிமா உலகமாக கொரியன் சினிமா உள்ளது. இந்நிலையில் நெட்பிளிக்ஸில் ஒரு மாதத்துக்கு முன்னர் வெளியான ஸ்கிவிட் கேம்ஸ் என்ற சீரிஸ் உலகளவில் கவனத்தைப் பெற்று பார்க்கப்பட்டது.

இந்த தொடர் குறித்து பேசிய நெட்பிளிக்ஸின் தலைமை செயல் அதிகாரி ‘இந்த தொடர் உலக அளவில் பிரம்மாண்டமாக ரசிகர்களை சென்று சேரும். ஆங்கிலமல்லாத தொடர்களில் நம்பர் ஒன் சீரிஸாக மாறும்’ எனக் கூறியுள்ளார். வெளியானதில் இருந்து சுமார் 11 கோடி பேரால் நெட்பிளிக்ஸ் தளத்திலேயே பார்க்கப்பட்டுள்ளதாம். இதையடுத்து இரண்டாம் பாகம் டிசம்பர் மாதம் ரிலீஸாகவுள்ளது.

இந்நிலையில் ஸ்க்விட் கேம்ஸ் சீரிஸின் ஆங்கில ரீமேக்கை இயக்குனர் டேவிட் பின்ச்சர் இயக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். சீரிஸுக்கான திரைக்கதையை டென்னிஸ் கெல்லி எழுதிவருகிறார். விரைவில் நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் பற்றிய விவரம் வெளியாகும் என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

20 ஆண்டுகளாக திரையில் சிகரெட் பிடித்ததில்லை… ஆனால் ரோலக்ஸுக்காக அதை மீறினேன் – சூர்யா

ரிஷப் ஷெட்டி நடிக்கும் ஜெய் ஹனுமான் படத்தின் முதல் லுக் போஸ்டர் ரிலீஸ்!

ஸ்க்விட் கேம்ஸ் சீரிஸின் ஆங்கில ரீமேக்கை இயக்கும் ஹாலிவுட் இயக்குனர் டேவிட் பின்ச்சர்!

யாஷ் பட ஷூட்டுக்காக 100 மரங்களை வெட்டிய படக்குழு… அமைச்சர் குற்றச்சாட்டு!

விடாமுயற்சி இறுதிகட்ட ஷூட்டிங் எப்போது?.. வெளியான தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments