Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மகள் கொடுத்த பரிசு; அதிர்ச்சியடைந்த எம்.எஸ்.பாஸ்கர் - வைரலாகும் வீடியோ

Webdunia
செவ்வாய், 2 ஜனவரி 2018 (15:35 IST)
தமிழ் சினிமாவில் காமெடியனாகவும், குணச்சித்திர வேடங்களிலும் நடித்து வருபவர் நடிகர் எம்.எஸ்.பாஸ்கர். இவர் தற்போது  பல படங்களில் முக்கியமான வேடங்களில் நடித்து வருகிறார். இவர் தமிழில் டப் செய்யப்பட்ட பல ஹாலிவுட் படங்களுக்கு குரல் கொடுத்துள்ளார். அவரது மகளும் டப்பிங் பணியை செய்து  வருகிறார்.
எம்.எஸ்.பாஸ்கரின் மகள் ஐஷ்வர்யா தனது அப்பாவுக்கு நியூ இயர் சர்ப்ரைஸ் பரிசு கொடுத்து அசத்தியுள்ளார். பெசன்ட் நகர் பீச்சில் அவரது கண்ணில் துணியைக் கட்டி அழைத்து வந்து ராயல் என்பீல்ட் புல்லட்டை பரிசாகக் கொடுத்துள்ளார். இதை  சற்றும் எதிர்பார்க்காத எம்.எஸ்.பாஸ்கர் தனது மகளை கட்டிக் கொண்டு ஆனந்தக் கண்ணீர் விட்டார். அப்போது  எம்.எஸ்.பாஸ்கரின் மனைவியும் உடன் இருந்தார். ஐஷ்வர்யா தன் தந்தைக்கு கொடுத்த சர்ப்ரைஸ் வீடியோவை ஃபேஸ்புக்கில் தற்போது வைரலாகி வருகிறது. 
 
இந்த வீடியோவை பார்த்த பலரும் நெகிழ்ந்துபோய் பாராட்டுவதோடு, இந்த வீடியோவை ஷேர் செய்து வருகின்றனர். எம்.எஸ்.பாஸ்கருக்கும், அவரது மகளுக்கும் வாழ்த்து கூறி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மஞ்சள் காமாலை நோய் பாதிப்பு: புதுப்பேட்டை, தெறி, விக்ரம் படங்களில் நடித்த நடிகர் உயிரிழப்பு..!

ரேஸ்ல எனக்கு என்ன வேணாலும் ஆகலாம்..! - மகிழ்திருமேனியிடம் AK சொன்ன அந்த வார்த்தை!

எனக்கு எந்த விருதும் வேணாம்.. வேற யாருக்காவது குடுங்க! - மாநில விருதை வாங்க மறுத்த கிச்சா சுதீப்!

மிஷ்கின் இளையராஜாவை ஒருமையில் அழைத்ததை இப்படிதான் பார்க்கவேண்டும்- நடிகர் குரு சோமசுந்தரம் பதில்!

வெளிநாடுகளில் ஒரு நாள் முன்னதாகவே ரிலீஸ் ஆகும் விடாமுயற்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments