Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாட்ஷாவுக்கு நிகர் தர்பார் - அடித்து சொல்லும் ஏ.ஆர்.முருகதாஸ்!

Webdunia
திங்கள், 30 டிசம்பர் 2019 (17:44 IST)
தர்பார் படத்தின் இடைவேளை பாட்ஷாவுக்கு நிகரா இருக்கும் என இயக்குனர்  ஏ.ஆர்.முருகதாஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார். 
 
ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் படம் தர்பார். இந்தப் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார். படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். லைகா நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்து வருகிறது.
 
ரஜினிக்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்கும் இப்படத்திற்கு  சந்தோஷ் சிவன் ஒளிப்பதிபதிவு செய்கிறார்.  கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தர்பார் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர், செகண்ட் லுக் என அடுத்தடுத்து வெளியாகி ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துவிட்டது. சமீபத்தில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற்றிருந்தது. மேலும், படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரைலர் வெளியாகி படத்தின் மீது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. 
 
இந்நிலையில் தற்போது இப்படத்தின்  இயக்குனர்  ஏ.ஆர்.முருகதாஸ் பிரபல யூடியூப் சேனல் ஒன்றிற்கு பிரத்யேக பேட்டி கொடுத்திருந்தார். அப்போது தர்பார் படத்தை குறித்து பேசிய அவர், தனக்கு மிகவும் பிடித்த இன்டெர்வல் காட்சி பாட்ஷா தான் என்றும் அதற்கும் சற்றும் குறைவில்லாமல் தர்பார் படத்தின் Intermission காட்சி இருக்கும் என்றும் நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

விடாமுயற்சிய விடுங்க.. இத பாருங்க! Good bad Ugly ஃபர்ஸ்ட் லுக்! – தல பொங்கலுக்கு ரெடியா?

குக் வித் கோமாளி சீசன் 5.. முதல் எலிமினேஷன் இவரா? ஷாலின் ஜோயா எப்படி தப்பித்தார்?

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அடுத்த கட்டுரையில்
Show comments