Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நோ நோ...அதெல்லாம் முடியாது..! அடம்பிடிக்கும் லைக்கா - ஓவர் கெடுபிடியில் "தர்பார்"

Webdunia
வியாழன், 21 நவம்பர் 2019 (16:04 IST)
ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் படம் தர்பார். இந்தப் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார். படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். லைகா நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்து வருகிறது.
ரஜினிக்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்கும் இப்படத்திற்கு  சந்தோஷ் சிவன் ஒளிப்பதிபதிவு செய்கிறார்.  கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தர்பார் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர், செகண்ட் லுக் என அடுத்தடுத்து வெளியாகி ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துவிட்டது. 
 
இந்நிலையில் தற்போது தர்பார் படத்தின் வியாபாரம் சூடு பிடித்துள்ளது. அந்தவகையில் அதிமுகவில் முதலமைச்சர் எடப்பாடிக்கு அடுத்த படியாக இருக்கும் முக்கிய நபரான ஒருவரின் பின்னணியில் தர்பார் படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை கைப்பற்ற முயற்சி செய்து வருகிறார்களாம். இப்படி ஆளாளுக்கு போட்டிபோட்டுக்கொண்டு முதியடிப்பதை பார்த்த லைக்கா நிறுவனம் படத்தின் விலை ரூ. 70 கோடிக்கு மேல் நிர்ணயித்துள்ளது. 
ஆனால், விநியோகிஸ்தர்கள் ரூ.  60 கோடி  நிர்ணயித்துள்ளனர். ஏனென்றால் இதற்கு முன்னர் வெளிவந்த பேட்ட திரைப்படம் ரூ. 54 கோடி வசூல் செய்திருந்தது. எனவே தர்பார் படத்தை வாங்கி நஷ்டம் அடையாமல் இருக்க ரூ.60 என டார்கெட் செய்திருக்கிறார்கள் விநியோகிஸ்தர்கள். ஆனால் லைகா நிறுவனமோ  தன்னுடைய விலையிலிருந்து கொஞ்சம் கூட குறைக்காமல் பிடிவாதம் பிடித்து வருகிறது. இதனை அறிந்த ரஜினிகாந்த் இப்படி தயாரிப்பு நிறுவனம் பேராசை கொண்டுள்ளதால் தான் மக்கள் மத்தியில் தனக்கு அவப்பெயர் வருகிறது என வருத்தத்துடன் இருந்து வருகிறாராம். 

தொடர்புடைய செய்திகள்

அமலாபாலுக்கு ஆண் குழந்தை.. இன்ஸ்டாவில் வெளியிட்ட க்யூட் வீடியோ..!

’புஷ்பா 2’ படத்தின் புதிய ரிலீஸ் தேதி.. ‘தங்கலான்’ படத்திற்கு வழிவிட்டதால் ரஞ்சித் மகிழ்ச்சி..!

நடிகை வேதிகாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

பச்சை நிற உடையில் க்ரீத்தி ஷெட்டியின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

துருவ் விக்ரம்மை ரொமாண்டிக் ஹீரோவாக மாற்றப் போகும் சுதா கொங்கரா!

அடுத்த கட்டுரையில்
Show comments