Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் பேசினால் முன்ஜாமீன் ரத்து – பா ரஞ்சித்துக்கு நீதிமன்றம் நிபந்தனை !

Webdunia
புதன், 26 ஜூன் 2019 (08:39 IST)
ராஜராஜ சோழன் குறித்து கருத்து தெரிவித்து சர்ச்சையில் சிக்கிய திரைப்பட இயக்குனர் பா ரஞ்சித்துக்கு நீதிமன்றம் முன் ஜாமீன் வழங்கியுள்ளது.

கடந்த 5 ஆம் தேதி திருப்பனந்தாள் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பா.ரஞ்சித் நீலப்புலிகள் அமைப்பு ஏற்பாடு செய்த கூட்டத்தில் கலந்துகொண்டார். அப்பொது பேசிய ரஞ்சித், மன்னர் ராஜ ராஜ சோழன் காலத்தில்தான் தலித் மக்களின் நிலம் பறிக்கப்பட்டதாகவும் 400க்கும் மேற்பட்ட பெண்கள் தேவதாசிகளாக மாற கட்டாயப்படுத்த பட்டதாகவும் கடுமையான விமர்சித்தார். பா. ரஞ்சித்தின் இந்தப் பேச்சுக்கு  சமுக வலைதளங்களிலும் ஆதரவும் கடுமையான விமர்சனங்களும் எழுந்தன. ரஞ்சித்தின் பேச்சுக்கு இந்து அமைப்புகளும் இந்து மத அபிமானிகளும் வன்மையாகக் கண்டனம் தெரிவித்து அவரைக் கைது செய்ய வேண்டும் எனக் குரல் எழுப்பினர்.

ரஞ்சித்தின் இந்தப்பேச்சை எதிர்த்து திருப்பனந்தாள் போலீஸ் தாமாக முன் வந்து வழக்குப் பதிவு செய்தது. இதனால் எந்த நேரமும் அவர் கைது செய்யப்படலாம் என்ற சூழல் உருவானது. இதையடுத்து அவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் முன் ஜாமீன் கோரி ரஞ்சித் மனுத்தாக்கல் செய்தார். இதனை ஏற்று விசாரித்த நீதிபதி ரஞ்சித்தைக் கைது செய்ய ஜூன் 21  தடை விதித்தார். மேலும் ஜூன் 21 ஆம் தேதி வழக்கு விசாரணைக்கு வந்த போது ரஞ்சித்தை கைது செய்வதற்கு விதிக்கப்பட்ட தடையை நீட்டிக்க முடியாது என கூறினர். இதனால் ரஞ்சித் எந்நேரமும் கைது செய்யப்படலாம் என்ற சூழ்நிலை உருவானது.

இதையடுத்து நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது பா ரஞ்சித் பேச்சால் இதுவரை எந்த வன்முறை சம்பவங்களும் நடக்க வில்லை என்பதால் அவரை காவலில் எடுத்து விசாரிக்க வேண்டிய அவசியம் இல்லை. எனவே அவருக்கு முன் ஜாமீன் வழங்கப்படுகிறது என அறிவித்தனர். ஆனால் வரும் காலத்தில் இது போல பேசினால் அவருக்கு வழங்கப்பட்டுள்ள் முன் ஜாமீனை ரத்து செய்ய சொல்லி காவல்துறை மாஜிஸ்திரேட் நீதி மன்றத்தை அனுகலாம் எனக் கூறியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

விடுதலை 2 ஊடக விமர்சனம்: வெற்றிமாறனின் கம்யூனிச கையேடா? படம் எப்படி இருக்கிறது?

முஃபாசா படத்துக்கு பூனைக்குட்டியா? மகேஷ் பாபு ரசிகர்கள் அட்டகாசம்!

கடைசி நேரத்தில் விடாமுயற்சி படத்தில் இணைந்த பிரபலம்.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

அம்பேத்கர் குறித்து அமித்ஷா பேசியது கண்டனத்துக்குரியது: இயக்குனர் வெற்றிமாறன்

மாடன் லுக்கில் ஜொலிக்கும் ஆரத்தி மாளவிகா மோகனன்… ஸ்டன்னிங் க்ளிக்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments