Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’ருத்ரன்' திரைப்படத்தை வெளியிட தடை: நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

Webdunia
புதன், 12 ஏப்ரல் 2023 (07:37 IST)
நடிகர் ராகவா லாரன்ஸ் நடித்த ’ருத்ரன்' என்ற திரைப்படம் வரும் தமிழ் புத்தாண்டு விருந்தாக ஏப்ரல் 14ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் இந்த படத்தை ஏப்ரல் 21ஆம் தேதி வரை வெளியிட நீதிமன்றம் தடை விதித்துள்ளதால் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. 
 
ருத்ரன் படத்தின் ஹிந்தி உள்ளிட்ட வடமொழி டப்பிங் உரிமையைப் பெற்ற ரெவன்சா என்ற நிறுவனம் 12.25 கோடிக்கு படத்தயாரிப்பு நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்ததாகவும் இதற்காக முன்பனமாக 10 கோடி செலுத்தி இருந்ததாகவும் கூறப்படுகிறது. 
 
10 கோடி ரூபாய் முன்பணம் செலுத்திய நிலையில் மேலும் 4.5 கோடி கேட்டு தயாரிப்பு நிறுவனம் ஒப்பந்தத்தை ரத்து செய்ததாக சென்னை உயர்நீதிமன்றத்தில் ரெவன்சா நிறுவனம் வழக்கு தொடர்ந்து உள்ளது. 
 
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் ருத்ரன் திரைப்படத்தை ஏப்ரல் 24 ஆம் தேதி வரை வெளியிட தடை விதித்து உத்தரவிட்டு உள்ளது. இதனால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

’சர்தார் 2’ படத்தின் 3 நிமிட வீடியோ.. மாஸ் ஆக்சன் காட்சிகள்..!

’மேலிடத்து உத்தரவு’.. தனுஷுக்கு எதிராக அறிக்கை வெளியிட்ட ஃபைவ் ஸ்டார் நிறுவனம்..!

கிளாமர் இளவரசி ஜான்வி கபூரின் லேட்டஸ்ட் அழகிய போட்டோஷூட் ஆல்பம்!

குக் வித் கோமாளி சீசன் 6 எப்போது? புதிய கோமாளிகள் பங்கேற்பார்களா?

கிளாமர் இளவரசி ஜான்வி கபூரின் லேட்டஸ்ட் அழகிய போட்டோஷூட் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments