Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விரைவில் ‘குக் வித் கோமாளி’ சீசன் 5: போட்டியாளர்கள் இவர்களா?

Mahendran
செவ்வாய், 23 ஜனவரி 2024 (13:53 IST)
விஜய் டிவியில் குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சி மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில் இதுவரை நான்கு சீசன்கள் முடிவடைந்துள்ளது. இந்த நிலையில் சமீபத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சி முடிவடைந்ததை அடுத்து விரைவில் குக் வித் கோமாளி நிகழ்ச்சி விஜய் டிவியில் ஆரம்பமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது 
 
அந்த வகையில் தற்போது போட்டியாளர்களை தேர்வு செய்யும் பணி நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. கடந்த நான்கு சீசன்கள் போலவே இந்த சீசனிலும் செஃப்  தாமு மற்றும் வெங்கடேஷ் பட் ஆகிய இருவரும் நடுவராக இருப்பார்கள் என்றும் இந்த சீசனிலும் ரக்சன் வீஜே மணிமேகலை ஆகியோர் தொகுத்து வழங்குவார்கள் என்று கூறப்படுகிறது 
 
மேலும் போட்டியாளர்களாக தற்போது வந்துள்ள தகவலின் படி நடிகை வடிவுக்கரசி, தம்பி ராமையாவின் மகன் உமாபதி ,பாண்டியன் ஸ்டோர் சீரியலில் மீனாவாக நடிக்கும் ஹேமா,  டான்ஸ் மாஸ்டர் ஸ்ரீதரன் மகள் அக்ஷதா,  பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட விஷ்ணு விஷால் ஆகியோர் கலந்து கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது. 
 
மேலும் சில போட்டியாளர்கள் பரிசீலனை செய்யப்பட்டு வருவதாகவும் இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது. அதேபோல் கோமாளி வரிசையிலும் இந்த முறை கூடுதலாக சிலர் அறிமுகம் ஆவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

உலக புற்றுநோய் தினத்தில் நடிகை கெளதமி ஏற்படுத்திய விழிப்புணர்வு..!

டிரடிஷனல் லுக்கில் கொள்ளையழகில் ஜொலிக்கும் ஸ்ரேயா…!

ரகுல் ப்ரீத் சிங்கின் லேட்டஸ்ட் கலக்கல் போட்டோஷூட் ஆல்பம்!

விஜய் பட வில்லனை சிறைப்படுத்திய அமெரிக்க அதிகாரிகள்… விமான நிலையத்தில் நடந்த அவமதிப்பு!

சிவகார்த்திகேயன் படத்தில் இருந்து சிபி சக்ரவர்த்தி விலகியது ஏன்?

அடுத்த கட்டுரையில்
Show comments