Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஜய் சேதுபதி படத்தின் ஒளிப்பதிவாளர் விலகல்..

Webdunia
செவ்வாய், 24 அக்டோபர் 2017 (21:12 IST)
விஜய் சேதுபதி நடிக்க இருக்கும் தெலுங்குப் படத்தில் இருந்து ஒளிப்பதிவாளர் விலகியுள்ளார்.


 
 
விஜய் சேதுபதி முதன்முதலாக நடிக்க இருக்கும் தெலுங்குப் படம் ‘சயிரா நரசிம்ம ரெட்டி’. சிரஞ்சீவி ஹீரோவாக நடிக்கும் இந்தப் படத்தில் அமிதாப் பச்சன், சுதீப், நயன்தாரா மற்றும் ரவி கிஷண் ஆகியோர் நடிக்கின்றனர். இந்தப் படத்தின் தொடக்க விழா, கடந்த ஆகஸ்ட் மாதம் ஹைதராபாத்தில் விமர்சையாக நடந்தது.
 
வருகிற டிசம்பர் மாதம் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது. இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவாளராக முதலில் ரவிவர்மன் கமிட்டாகியிருந்தார். திடீரென்று அவர் விலகிக்கொள்ள, ‘எந்திரன்’ படத்துக்கு ஒளிப்பதிவு செய்த ரத்னவேலு இப்போது ஒப்பந்தமாகியிருக்கிறார். இதேபோல், இந்தப் படத்துக்கு இசையமைப்பதாக இருந்த ஏ.ஆர்.ரஹ்மானும் பர்சனல் காரணங்களுக்காக விலகிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

விக்ராந்தை அடுத்து ‘எஸ்கே 23’ படத்தில் இணைந்த ‘சார்பாட்டா பரம்பரை நடிகர்..!

கருப்பு நிற கிளாமர் உடையில் திஷா பதானியின் லேட்டஸ்ட் போட்டோஷூட்!

உங்களுக்கு இது கேம்.. எங்களுக்கு இது வாழ்க்கை.. விஜய்சேதுபதி மகன் சூர்யாவின் ‘பீனிக்ஸ்’ டீசர்..!

இரண்டாம் நாளில் அதிகமான விஜய் சேதுபதியின் மகாராஜா திரைப்பட வசூல்!

அடுத்த கட்டுரையில்
Show comments