Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தன் மகளுக்கு இந்தியாவின் பெயரை வைத்த பிரபல ஹாலிவுட் நடிகர்

Webdunia
செவ்வாய், 11 ஜூன் 2019 (14:14 IST)
பிரபல ஹாலிவுட் நடிகரான க்ரிஸ் ஹெம்ஸ்வொர்த் தனது மகளுக்கு இந்தியாவின் பெயரை வைத்திருப்பது இந்திய ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆஸ்திரேலியாவை பூர்வீகமாக கொண்ட ஹாலிவுட் நடிகர் க்ரிஸ் ஹெம்ஸ்வொர்த். இந்திய ஹாலிவுட் ரசிகர்களின் சிம்ம சொப்பனமான அவெஞர்ஸ் திரைப்படத்தில் ‘தோர்’ என்னும் கடவுள் கதாப்பாத்திரமாக நடித்தவர். இந்தியாவில் தோர் மற்றும் அவரின் சுத்தியலுக்கென்றே மிகப்பெரிய ரசிகர் கூட்டம் உண்டு. நேசமணிக்கு பிறகு சுத்தியலால் பிரபலமடைந்தவர் க்ரிஸ் ஹெம்ஸ்வொர்த். தற்போது எம்.ஐ.பி என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். அதுவும் இந்த மாதம் திரைக்கு வர இருக்கிறது.

இதற்கிடையே பல முறை இந்தியாவை சுற்றி பார்க்க வந்திருக்கிறார் க்ரிஸ் ஹெம்ஸ்வொர்த். நிறைய இடங்களில் பேட்டிகளில் தனக்கும், இந்தியாவுக்குமான உறவு குறித்து பெருமையோடு பேசியிருக்கிறார். தற்போது நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனத்துக்காக தயாரிக்கும் ”தாக்கா” என்ற தொடரில் நடிப்பதற்காக மும்பை வந்திருந்தார். அப்போது பத்திரிக்கையாளர்களர்களுக்கு பேட்டியளித்த அவர் “எனக்கு இந்தியாவை மிகவும் பிடித்திருக்கிறது. என் மனைவி இந்தியாவில் அதிக காலம் தங்கியிருக்கிறார். அவர்தான் எங்கள் மகளுக்கு ”இந்தியா ரோஸ்” என பெயர் வைத்தார்” என கூறியுள்ளார்.

இந்திய திரைப்படங்களில் நடிப்பீர்களா? என நிருபர் ஒருவர் கேட்ட கேள்விக்கு “இதை பற்றி சிலரிடம் பேசியிருக்கிறேன்.. எனவே நடக்கலாம்” என பதில் அளித்துள்ளார்.

ஏற்கனவே அவெஞ்சர்ஸ் இன்ஃபினிட்டி வார் வெளியாகும் முன்பு ஒருமுறை இந்தியா வந்த க்ரிஸ் ஹெம்ஸ்வொர்த் சிறுவர்களுடன் எடுத்திருந்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட அது ரசிகர்களிடையே வைரலானது. தற்போது அவரது குழந்தைக்கு “இந்தியா ரோஸ்” என பெயர் வைத்திருப்பது இந்திய ரசிகர்களை மகிழ்ச்சியில் துள்ளாட்டம் போட வைத்திருக்கிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பார்பி டால் போல மின்னும் தமன்னா… அழகிய புகைப்பட தொகுப்பு!

ஸ்டன்னிங்கான உடையில் பூஜா ஹெக்டேவின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

சூர்யா 45 படத்தில் இணைந்த லப்பர் பந்து படக் கதாநாயகி!

நான் பிற மொழிப் பாடல்களில் இருந்து காப்பியடிக்கக் காரணமே அவர்கள்தான்… ரகசியம் பகிர்ந்த தேவா!

முதல் 2 நாட்களில் 20 கோடி ரூபாய் வசூல்.. ஜப்பானைக் குறிவைக்கும் மகாராஜா!

அடுத்த கட்டுரையில்
Show comments